/* */

பைக்கில் வைத்திருந்த ரூ.1.29 ஆயிரம் கொள்ளை: மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

சுரண்டையில் பட்ட பகலில் பைக்கில் வைத்திருந்த ரூ 1.29 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்மநபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

பைக்கில் வைத்திருந்த ரூ.1.29 ஆயிரம் கொள்ளை: மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு
X

சுரண்டையில் பைக்கில் வைத்திருந்த ரூ.1.29 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சுரண்டையில் பட்ட பகலில் பைக்கில் வைத்திருந்த ரூ 1-29 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்மநபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் நகரை சேர்ந்தவர் முருகராஜ் மகன் ஜெய் கணேஷ் (38). இவர் அவரது அண்ணனுடன் இணைந்து ஒலி பெருக்கி அமைத்து வருகிறார். ‌‌நேற்று மதியம் இவர் காமராஜர் நகரில் உள்ள அரசு வங்கியில் நகையை அடகு வைத்து ரூ 1.30 லட்சம் கடனாக பெற்றுள்ளார். ‌‌அதில் ரூ 1.29 ஆயிரத்தை எடுத்து அவரது பைக்கில் வைத்து வந்துள்ளார். இதை நோட்டமிட்ட மாஸ்க் அணிந்து வந்த மர்ம நபர் அவரை பின் தொடர்ந்து வந்துள்ளார்.‌

இந்நிலையில் ஜெய் கணேஷ் பெட்ரோல் பங்க் அருகே உள்ள ஏடிஎம் மையத்தில் மீதி பணம் வங்கி கணக்கில் உள்ளதா என செக் பண்ண சென்றுள்ளார். அதை பயன்படுத்திய மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்கில் வைத்திருந்த ரூ.1.29 லட்சம் ரூபாயை எடுத்து கொண்டு மாயமானார்.

இது குறித்து உடனடியாக அவர் சுரண்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சுரேஷ் சிசிடிவி காட்சிகள் மூலம் மர்ம நபரை தேடி வருகின்றனர். பட்டபகலில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 10 Feb 2022 1:36 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை