/* */

புகையிலை பொருட்களை வாகனத்தில் பதுக்கி வைத்திருந்த நபர் கைது

கைது செய்யப்பட்ட குமார் மீது ஏற்கெனவே புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ததற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

புகையிலை பொருட்களை வாகனத்தில் பதுக்கி வைத்திருந்த நபர் கைது
X

புகையிலை பொருட்களை வாகனத்தில் பதுக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலஞ்சி குமாரர் கோவில் ஜங்ஷன் அருகே சிறப்பு சார்பு ஆய்வாளர் காளிமுத்து வாகன தணிக்கை ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த குமார்(47) என்ற நபரின் வாகனத்தை சோதனை செய்ததில் அதில் விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது சோதனையில் தெரிய வந்தது.

இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்தபோது குமார் சிறப்பு சார்பு ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்து தன்னை கைது செய்தால் தாக்கி விடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து சார்பு ஆய்வாளர் சுப்பிரமணியன் விசாரணை மேற்கொண்டு, மேற்படி நபரான வல்லம் பகுதியை சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் குமார்(47) என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 4100 மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.கைது செய்யப்பட்ட குமார் மீது ஏற்கெனவே புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ததற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 24 Sep 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்