/* */

தென்காசி: உள்ளாட்சித்தேர்தலில் கெத்து காட்டும் கிராமப்புற இளைஞர்கள்

தென்காசியில், உள்ளாட்சி தேர்தல்களம் சூடுபிடிக்கும் சூழலில், இளைஞர்கள் நூதன பிளக்ஸ் வைத்து, அரசியல்வாதிகளை மிரள வைக்கின்றனர்.

HIGHLIGHTS

தென்காசி: உள்ளாட்சித்தேர்தலில் கெத்து காட்டும் கிராமப்புற இளைஞர்கள்
X

இளைஞர்கள் வெளியிட்டுள்ள நூதன அறிவிப்பு.

தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல். சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இங்கு தேர்தல், 06.10.2021 தேதி ஆலங்குளம், கீழப்பாவூர், கடையம், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய ஒன்றியங்களுக்கு முதல் கட்டமாகவும், 9.10.2021 அன்று தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம் ஆகிய ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று வரை 1473 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் தேர்தல் களத்தில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. கீழப்பாவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆவுடையனூர் ஊராட்சியில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக ஊராட்சிமன்ற செயலரை பணியிட மாற்றம் செய்துள்ளனர். இதனால் விழிப்படைந்த கிராம இளைஞர்கள் வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், "தங்கள் ஊராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் கவனத்திற்கு: ஊராட்சியில் வெற்றிபெற்று பொது நிதியை எடுத்து தேர்தல் செலவுகளை சரி செய்துவிடலாம் என்று எண்ண வேண்டாம். கிராமசபை கூட்டங்களில் ஊராட்சியில் உள்ள வரவு-செலவு கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல் ஊராட்சிக்கு உட்பட்ட குக்கிராமங்களில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களிலும் இதே நிலை தொடர வேண்டும்" என்று, அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பினை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதேபோல், ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்து இளைஞர்கள் சமூக வலைதளங்களில் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில், சங்கரன்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட பட்டாடைபட்டி கிராமத்தில், அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர். குருவிகுளம் ஒன்றிய பகுதிகளிலும் இதே போன்ற ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இளைஞர்களில் இந்த கெத்து காட்டும் செயல்களால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, மத்தியிலும் ஒரு விதமான கலக்கம் ஏற்பட்டுள்ளது. எது எப்படியோ கிராமத்து இளைஞர்களின் எண்ணங்கள் நிறைவேறினால், நேர்மையான ஒரு கிராம ஊராட்சி அமையும் என்று பொதுமக்களும் இதை ஆமோதிக்கின்றனர்.

Updated On: 20 Sep 2021 7:14 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்