/* */

தென்காசியில் கஞ்சா, கள்ளநோட்டுகளுடன் கும்பல் கைது

Ganja Seized -தென்காசியில் கஞ்சா, கள்ளநோட்டுகளுடன் இருந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

Ganja Seized | Crime News Tamil
X

கள்ள நோட்டுகள் மற்றும் கைதானவர்கள்.

Ganja Seized -தென்காசி மாவட்டத்தில் அதிக அளவில் பஞ்சா மற்றும் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக காவல்துறையினருக்கு தொடர் புகார்கள் மற்றும் ரகசிய தகவல்கள் கிடைத்தன. அதனைத் தொடர்ந்து காவல் மண்டலத் தலைவர் அஸ்ரா கார்க் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்தரவிட்டார். இதன்படி கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின்படி தென்காசி துணை கண்காணிப்பாளர் மணிமாறன் மேற்பார்வையில் தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் மற்றும் தென்மண்டல காவல்துறை தலைவர் தனிப்படை உதவியுடன் தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். பல இடங்களி்ல் திடீர் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின் போது தென்காசி உடையார் தெருவை சேர்ந்த ராஜா என்பவரது மகன் மணிச்செல்வன் வயது 28 மற்றும் செங்கோட்டை பெரிய பிள்ளை வலசை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அனஞ்ச கும்பு மகன் மணிகண்டன் வயது 24 ஆகியோர் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தார்கள். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குபின்முரனாக பதில் சொன்னார்கள். இதனால் அவர்கள் வைத்திருந்த பைகளை போலீசார் சோதனை செய்தனா். அப்போது அவர்களிடமிருந்து 1,20,000 ரூபாய் மதிப்பிலான சுமார் 4 கிலோ கஞ்சாவும், 2,00,000 மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அவைகளை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தொடர்ந்து இது சம்பந்தமாக அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் செங்கோட்டை பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் தெற்கு மேடு ஆர்.சி.தெருவைச் சேர்ந்த சேது என்ற வடிவேல் மகன் பிரகலாதன் என்பவரும் விஸ்வநாதபுரம் புதுமனை தெருவைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் மாரிமுத்து ஆகிய இரண்டு நபர்களும் ரூபாய் 2லட்சத்து 25ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்காக கொண்டு வந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு நபர்களையும் போலீசார் கைது செய்து கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இந்த கள்ளநோட்டுகள் அவர்களுக்கு எப்படி கிடைத்து என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

தெற்க்கு மண்டல காவல்துறை தலைவரின் தனிபடை போலீசார் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் சமீபகாலமாக கஞ்சா, குட்கா, மது பாட்டில்கள் என தென்காசி மாவட்டங்களில் அதிக அளவு தாராளமாக புழக்கத்தில் இருந்து வந்தது. தற்போது ஒரிரு நாட்களில் கஞ்சா, கள்ள நோட்டுகள் என தென்மண்டல காவல்துறை தலைவரின் தனிபடை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்து உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைத்து விடுகிறார்கள். இதனால் தெற்க்கு மண்டல காவல்துறை தலைவரின் தனிபடை போலீசாரை பொதுமக்கள் பாராட்டினார்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Oct 2022 11:27 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  3. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  4. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  5. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  8. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  9. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?