/* */

தரமற்ற இனிப்பு பலகாரங்கள்: அதிரடி காட்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்

தீபாவளியை முன்னிட்டு தரமற்ற இனிப்பு பலகாரங்கள் தயாரித்த நிறுவனங்கள் மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

HIGHLIGHTS

தரமற்ற இனிப்பு பலகாரங்கள்: அதிரடி காட்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்
X

 தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு பலகாரங்கள் தயார் செய்யும் இடத்தை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

தீபாவளியை முன்னிட்டு தென்காசியில் பலகாரங்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் தயார் செய்யும் கூடங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.. ஐம்பது கிலோவிற்கும் மேற்பட்ட தரமற்ற இனிப்பு பலகாரங்கள் மட்டும் தின்பண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உணவு துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு தென்காசி மாவட்டம் மேலகரம் மற்றும் குத்துக்கல் வலசை பகுதிகளில் உள்ள தீபாவளி பலகாரங்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் தயார் செய்யப்படும் கூடங்களில் உணவு பாதுகாப்புத்துறை நாக சுப்பிரமணியன் அதிரடி சோதனை மேற்கொண்டார். சோதனையின் போது அதிகமாக செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட 31 கிலோ இனிப்பு பலகாரங்கள் , 22 கிலோ தின்பண்டங்கள் , 40 லிட்டர் மீண்டும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், ஒன்றரை லிட்டர் காலாவதியான குளிர்பானங்கள், 7 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மேலும் எரிப்பதற்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட 300 கிலோ முந்திரி தோடுகள் அப்பகுதிகளில் உள்ள கடைகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து தரமற்ற இனிப்பு மற்றும் தின்பண்டங்களை வைத்திருந்த 3 கடைகளுக்கு சுமார் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தீபாவளி பலகாரங்கள் தயார் செய்யும் கூடங்களில் சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பலகாரங்கள் தயார் செய்யும் முன் தாயார் செய்யும் இடங்களை சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்தினார்.

பண்டிகை நாட்களில் இவ்வாறு அதிக அளவில் ஆன தரமற்ற பலகாரங்கள் கண்டறியப்பட்ட சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 9 Nov 2023 4:06 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!