/* */

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தீ தடுப்பு பயிற்சி

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணியாளர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தீ தடுப்பு பயிற்சி
X

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தென்காசி மாவட்ட தீயணைப்பு துறை மூலம், மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் தீயணைப்பு பற்றிய விரிவாக்க உரை மற்றும் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது .

இப்பயிற்சி வகுப்பில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஜெஸ்லின் தலைமை தாங்கினார். இப்பயிற்சி வகுப்பில் மருத்துவர்கள் , செவிலியர்கள் , மருந்தாளுனர்கள் , நுண்கதிர் ஆய்வாளர்கள் , ICTC ஆலோசனையாளர் , பயிற்சி மருத்துவர்கள் , மற்றும் துப்புரவு பணியாளர்கள் என 200 க்கும் மேற்றப்பட்ட மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தென்காசி மாவட்ட தீயணைப்பு துறை மூலம், ரமேஷ் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மற்றும் சிவ சண்முகராஜ் தீயணைப்பு வீரர் ஆகியோர் பயிற்சி வகுப்பு நடத்தினார்.

பயிற்சியில்..

1. தீ விபத்து நேர்ந்தால், உடனடியாக 101 ஐ அழைக்கவும். யாரோ அதை ஏற்கனவே செய்துவிட்டதாக நிணைத்து விடாதீர்கள்!

2. நீங்கள் ஒரு தீயைக் கண்டதும், உங்கள் கட்டிடத்தின் நெருப்பு எச்சரிக்கையை செயல்படுத்துங்கள் (Fire Safety System) மற்றும் மற்றவர்களை எச்சரிக்கை செய்ய உங்கள் குரலின் உச்சியில் "தீ" அல்லது "நெருப்பு" என்று கத்தவும். வேறு எதையும் சொல்ல வேண்டாம். (மற்றவர்கள் நிலைமை பற்றிய தீவிரத்தை உணர நீண்ட நேரம் எடுக்க நேரிடும்.)

3. தீ விபத்து நடக்கும் நேரத்தில் லிப்டை பயன்படுத்த வேண்டாம். படிகளை பயன்படுத்தவும்.

4. புகையில் பிடிபட்டால், உங்கள் வாயையும் மூக்கையும் ஒரு ஈரமான துணியால் மூட வேண்டும்!

5. நீங்கள் ஒரு அறையில், புகையில் மாட்டிக்கொண்டு வழியையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கதவை மூடிவிட்டு, ஈரமான துண்டுகளாலோ அல்லது தாள்களாலோ கதவுகளின் துவாரங்கள் மற்றும் விரிசல்களை அடைத்து விடுங்கள். இது வரும் புகையை தடுக்கும்.

6. உங்கள் கட்டிடம் நெருப்பில் இருந்தால், நீங்கள் சிக்கிக்கொள்ளாவிடில், வெளியே சென்று, உடனடியாக 101 சேவையைத் தொடரவும்.

7. உங்கள் வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ ஒரு புகை எச்சரிக்கையியலில் (Smoke Alarm) முதலீடு செய்யுங்கள். தீ விபத்தை தடுப்பது எப்போதும் சிறந்தது.

8. புகை அலாரங்கள், நெருப்பு அலாரங்கள் மற்றும் பொது முகவரி அமைப்பு, தண்ணீர் நீரேற்றுகள் மற்றும் உங்கள் கட்டிடத்தில் தீ அணைத்தல் திட்டம் (Fire Safety System) ஆகியவற்றின் எல்லாவற்றும் சீரான நிலையில் இருப்பதை உறுதிசெய்யவும்.

9. உங்கள் அருகில் உள்ள தீ அணைப்பானின் (Fire extinguisher) தேதி மற்றும் ரீபில்களையும் சரி பாருங்கள்.

10. நெருப்பு அணைப்பான் எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் எப்போது பயன்படுத்துவது என்பவற்றைக் கற்றுக் கொள்வதற்கு கொஞ்சம் நேரம் செலவு செய்யுங்கள்!

11. உங்கள் கட்டிடத்தின் சங்கம் அல்லது குழுவானது ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் தீ பயிற்சிகளை ஏற்படுத்துகிறதா என்பதை உறுதிப்படுத்துங்கள். நீங்கள் உங்கள் கட்டிடத்தில் ஒரு பாதுகாப்பான இடம் (safe meeting area) ஒன்றை நியமித்து அதையும் சரிபார்க்கவும்.

12. தீ விபத்தின் நேரத்தில், கட்டிடத்தைச் சுற்றிலும் உள்ள மக்கள் கூட்டம் அவசர மற்றும் மீட்புப் பணியாளர்களைத் தடுக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், 101-ஐ அழைக்கவும், அப்பகுதியிலிருந்து வெளியேறவும்.

13. உங்கள் துணிகளில் நெருப்பு பிடித்துக்கொண்டால், ஓடாதீர்கள். அது தீயை மேலும் அதிகமாக்கும். கீழே படுத்து தரையில் உருளவும். எரியும் நெருப்பை, ஒரு போர்வையால் மூடி கட்டுப்படுத்துங்கள்.

14. உங்களுக்கு அவசர மற்றும் தீ பாதுகாப்பு பயிற்சி இல்லை என்றால், தீயில் மாட்டிக் கொணடவர்களுக்கு தவரான அறிவுறுத்தல்களை கொடுக்க வேண்டாம். அது அவர்களை குழப்ப நேரிடும்.

15. கடுமையான புகை மற்றும் விஷ வாயுக்கள் முதன்முதலில் மேல் நோக்கி சேகரிக்கும். புகை இருந்தால், தரையை நோக்கி இருங்கள். காற்று அங்கு தூய்மையாக இருக்கும்.

ஆகிய தீயணைப்பு பற்றிய விளக்க உரைகள் வழங்கப்பட்டது. மேலும் மருத்துவமனையில் பணிபுரியும் அணைத்து பணியாளர்களுக்கும் தீயணைக்கும் பயிற்சியும் செய்முறையுடன் வழங்கப்பட்டது.

தகுந்த நேரத்தில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை பணியாளர்கள் அனைவருக்கும் சிறப்பாக தீயணைப்பு பற்றிய பயிற்சி வகுப்பு நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்திய தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ரமேஷ் அவர்களுக்கு, மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் அவர்கள்,பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். பயிற்சியின் முடிவில் மருத்துவர் கீதா நன்றியுரை வழங்கினார் .

Updated On: 26 March 2022 2:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  3. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  4. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  5. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  6. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  7. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  9. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  10. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்