/* */

அவதூறு அண்ணாமலை என தென்காசியில் பட்டம் கொடுத்தார் துரை வைகோ

Tenkasi News -பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு அவதூறு அண்ணாமலை என தென்காசியில் பட்டம் கொடுத்துள்ளார் ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ

HIGHLIGHTS

அவதூறு அண்ணாமலை என தென்காசியில்  பட்டம் கொடுத்தார் துரை வைகோ
X

மாமனிதன் வைகோ ஆவணப்படத்தை வெளியிட்டு பேசினார் துரை வைகோ.

Tenkasi News -ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் 56 ஆண்டுகால அரசியல் பயணங்களை தொகுத்து 'மாமனிதன் வைகோ' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள ஆவணப்படம் நேற்று தென்காசி பி. எஸ். எஸ் -1 திரையரங்கில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க .தலைமை நிலைய செயலாளரும், மாமனிதன் வைகோ ஆவணப்படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான துரை வைகோ மற்றும் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தென்காசி மாவட்ட ம.தி.மு.க .செயலாளருமான வழக்கறிஞர் திருமலாபுரம் தி.மு.இராசேந்திரன், நெல்லை மத்திய மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம் உள்ளிட்ட ஏராளமான ம.தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் தோழமை கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. கடந்த 56 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களை காக்க நடத்திய ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், நடைபயணங்கள், நாடாளுமன்ற பணிகள், மிசாசட்டம், தடா சட்டம், பொடா சட்டம் உள்ளிட்ட கருப்பு சட்டங்களால் கைது செய்யப்பட்ட சம்பவங்கள், அவர் நடத்திய போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திருமலாபுரம் தி.மு.இராசேந்திரன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. மாநில மருத்துவர் அணி செயலாளர் வி. எஸ் .சுப்பாராஜ், நெல்லை மத்திய மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம், நெல்லை புறநகர் மாவட்ட பொருளாளர் சுரண்டை எஸ்.ராமகிருஷ்ணன், ம.தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் காசிராஜன், ம.தி.மு.க .பொதுக்குழு உறுப்பினர் ஏ டி நடராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் .பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிறுவனத் தலைவர் பொறியாளர் கோ. சுந்தரராஜன், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம். குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் தென்காசி நகர ம.தி.மு.க. செயலாளர் என். வெங்கடேஸ்வரன் வரவேற்று பேசினார். கீழப்பாவூர் தெற்கு ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் இராம. உதயசூரியன், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. தலைமை கழகசெயலாளரும், மாமனிதன் வைகோ ஆவணப்படத்தின் இயக்குநருமான, தயாரிப்பாளர் துரை வைகோ ஏற்புரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி சி.பி.எம். மாவட்ட செயலாளர் முத்து பாண்டியன், சி.பி.ஐ. சார்பில் கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ச.டேனி அருள்சிங், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் எம்.முகம்மது யாக்கூப், திராவிடர் கழக மாவட்ட தலைவர் த.வீரன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ். தங்கபாண்டியன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் வை.கலிவருணன் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் எம் முகைதீன், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் குற்றாலம் குமார், திராவிட தமிழர் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கரு. வீரபாண்டியன், ம.தி.மு.க. மாநில நிர்வாகிகள் கள்ளத்தியாம் சுதா பாலசுப்பிரமணியன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தோழமை கட்சியினர் உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்

முடிவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கடையநல்லூர் ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் இடைகால் செல்வசக்தி வடிவேல் நன்றி கூறினார்..

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கூறியதாவது:-

தமிழுக்காக தமிழினத்திற்காக தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளுக்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 56 ஆண்டுகளாக தன்னலம் கருதாது தொடர்ந்து தொய்வின்றி போராடி வருகிறார். அவரது அரசியல் பணிகளை அனைத்து தரப்பினருக்கும் எடுத்துக் கூறும் வகையில் மாமனிதன் வைகோ என்கிற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் இன்று மாமனிதன் வைகோ ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது. இதனைக் காண வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒன்றிய அரசு எந்த வகையில் இந்தியை திணிக்க முயற்சித்தாலும் அதனை மறுமலர்ச்சி தி.மு.க. கடுமையாக எதிர்க்கும். தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் செயல்பட்டு வரும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு தங்களது வலிமையான எதிர்ப்புக்களை தெரிவிக்கும்.

தமிழகத்தின் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தினம்தோறும் தவறான கருத்துக்களை அவதூறான கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகிறார். எனவே அவரை அவதூறு அண்ணாமலை என்று அழைப்பது தான் பொருத்தமாக இருக்கும். அவர் நாள்தோறும் எந்தவித ஆதாரமும் இன்றி பேசி வரும் கருத்துக்களுக்கு பதில் கூறி எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. தமிழகத்தில் நடைபெற்று வரும் தி.மு.க.வின் நல்லாட்சிக்கு மறுமலர்ச்சி தி.மு.க. என்றும் துணை நிற்கும் தமிழகத்தின் வாழ்வாதாரங் களுக்காக மறுமலர்ச்சி தி.மு.க. தொடர்ந்து தொய்வின்றி போராடும். இவ்வாறு ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கூறினார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 18 Oct 2022 11:10 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  5. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  6. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  10. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!