/* */

சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்: பள்ளிக்கல்வி அமைச்சர் தொடக்கம்

அனைத்து மாவட்டங்களில் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களிலும், ஊராட்சி ஒன்றியத்திற்கு ஆண்டுக்கு 20 முகாம்கள் நடத்தப்படும்

HIGHLIGHTS

சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்: பள்ளிக்கல்வி அமைச்சர் தொடக்கம்
X

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஊராட்சி ஒன்றியம், செல்லப்பன்பேட்டை ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறை சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி 

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஊராட்சி ஒன்றியம், செல்லப்பன்பேட்டை ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி (14.10.2022) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

பின்னர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க, தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம், செல்லப்பன்பேட்டை ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெறுகிறது.

தொலைதூர அணுக முடியாத கிராமங்களில் விவசாயிகளால் வளர்க்கப்படும் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் கால்நடை சுகாதார வசதிகளை வழங்கிடவும் மற்றும் விவசாயிகளிடையே கால்நடை வளர்ப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரமற்றும் விழிப்புணர்வு முகாம்கள் 2022-23 சென்னை தவிர, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களிலும், ஊராட்சி ஒன்றியத்திற்கு ஆண்டுக்கு 20 முகாம்கள் என்ற விதத்தில் 7760 முகாம்கள்,ரூ.7.76 கோடி நிதி ஒதுக்கீட்டில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த முகாம்களில் நோய் வாய்ப்பட்ட கால் நடைகளுக்கு சிகிச்சைஅளித்தல்,குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி, ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, சுண்டுவாத அறுவை சிகிச்சை போன்ற சிறுஅறுவை சிகிச்சைகள் மற்றும் மலடு நீக்கம் சிகிச்சைஉள்ளிட்ட மகப்பேறு உதவிகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் முகாமில் தொடர் சிகிச்சை தேவைப்படும் கால்நடைகளின் உரிமையாளர்கள் அருகில் உள்ள கால்நடை நிலையங்களுக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள். முகாம்களில் கால்நடை நோய் புலனாய்வு பிரிவினரால் கால்நடை நோய் கண்டறிதல் மற்றும் மடி நோய்க்கான ஏ பி எஸ் டி போன்ற சோதனைகளும் மேற்கொள்ளப்படு கின்றன. முகாமில் பங்குபெறும் ஏழை விவசாயிகளுக்கு தீவனக் கட்டுகள், விதைகள் மற்றும் தாது உப்புக்கலவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

மேற்படி கால்நடைசேவைகள் மட்டுமன்றி விரிவாக்க நடவடிக்கைகளாக பல்வேறுகால் நடைவளர்ப்பு நடைமுறைகள், தடுப்பூசி, குடற்புழுநீக்கம் நோய்கள் மற்றும் அவற்றின் கட்டுப்பாடு,செயற்கை முறை கருவூட்டலின் முக்கியத்துவம், அறிகுறி இல்லாத மடிவீக்க நோய் அடையாளம் காணுதல், பிறந்த கால்நடை மேலாண்மை மற்றும் வளர்ப்பு நடைமுறைகள் தொடர்பான கண்காட்சிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களும் முகாம்களில் விநியோகிக்கப்படுகிறது. இம் முகாம்களின் சிறப்பம்சமாக இளங்கிடேரி கன்றுகள் பேரணி நடத்தப்பட்டு,சிறப்பாக கன்றுகளை பராமரிக்கும் மூன்றுநபர்களுக்கும், சிறப்பாக கால்நடை வளர்க்கும் மூன்று நபர்களுக்கும்,பரிசுகளும் வழங்கப்படுகிறது.

ஒரு முகாமிற்கான மருந்துகளுக்காக ரூ.3000- தாது உப்பு கலவைக்கு,ரூ.2500- ஆக கூடுதல் ரூ.5500- தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்திற்கு, ஒதுக்கீடு செய்து அவற்றிலிருந்து மருந்துகளும், தாது உப்புகளும் பெற்று வழங்கப்படுகின்றன. முகாமிற்கான விளம்பரச் செலவுகளுக்கு ரூ.2900- சிறந்த கன்று வளர்ப்பு மற்றும் கால் நடை வளர்ப்புக்கான பரிசுகளுக்கு ரூ.1000- போக்குவரத்து செலவினம் ரூ.500- மற்றும் செயற்கை முறை கருவூட்டல் கட்டணம் ரூ.100 ஆக ஒட்டு மொத்தமாக ரூ.10,000- ஒரு முகாமிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் 2022-23 ஆம் நிதிஆண்டில் அக்டோபர் 2022 முதல் டிசம்பர் 2023 முடிய 280 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் ரூ. 28 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உள்ள தொலை தூர கிராமங்கள் பட்டியலிடப்பட்டு, அதில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த கிராம மேம்பாட்டு திட்டத்தில் இடம் பெறும் கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து, கால்நடைகளின் தொகை, அடர்த்தி மற்றும் கால்நடை நிலையங்களில் இருந்து தொலை தூரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்யப்படுகின்றன.

இம் முகாமின் மூலம் செல்லப்பன் பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த சுமார் 2000 கால்நடைகள் பயனடைய உள்ளன. தொலை தூர அணுக முடியாத கிராமங்களில் நடத்தப்படுவதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 3,50,527-பசுக்கள், 3749-எருமைகள், 25,025-செம்மறியாடுகள், 4,29,259-வெள்ளாடுகள் மற்றும் 8,15,045-கோழிகள் ஆகியவை முழுவதுமாக பயனடைவது உறுதி செய்யப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிர் சாகுபடி பரப்பளவு குறைந்து வருவதன் மூலம் எழுந்துள்ள தீவன பற்றாக் குறையை சமாளிப்பதற்காக உணவுப் பயிர் சாகுபடி செய்யும் 100 ஏக்கர் நிலங்களில் தீவனப் பயிர்களை ஊடு பயிராகவோ அல்லது வரப்பு பயிராகவோ சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு பின்னிருப்பு மானியமாக ஒரு ஏக்கருக்குரூ.3000 வழங்கப்பட உள்ளது. மேலும் கால்நடை காப்பீடு திட்டத்தின் கீழ் 2000 கால்நடைகள் 50 சதவீதமானியத்தில் காப்பீடு செய்யப்பட உள்ளன என்றார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. முன்னதாக சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு கேடயங்கள் மற்றும் பரிசுப் பொருட்களை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் துரைசந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), மாவட்ட ஊராட் சிதலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, பூதலூர் ஒன்றியப் பெருந்தலைவர் செல்லக்கண்ணு, கால்நடைப் பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் க.தமிழ்ச்செல்வம், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், உதவி இயக்குனர் ஐ.சையத் அலி, பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே. பொற்செல்வி, வே. ராஜா மற்றும் பலர் பங்கேற்றனர்.

Updated On: 14 Oct 2022 1:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்