தென்காசியில் 10-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

தென்காசியில் 10ஆம் நூற்றாண்டு கல்வெட்டு குளத்தில் நீர் வற்றியதால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தென்காசியில் 10-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு
X

 தென்காசி அருகே குளத்தில் தண்ணீர் வற்றியதால் தென்பட்ட பத்தாம் நூற்றாண்டு கல்வெட்டு.

தென்காசி நகரில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் புலியூர் குளம் உள்ளது. இந்தக் குளத்தில் மழை நேரத்தில் தண்ணீர் நிரம்பி அந்த பகுதியில் பாசனத்திற்கு பயன்பட்டு வருகிறது.

தற்போது கோடை காலம் என்பதால் அங்கு தண்ணீர் வற்றி உள்ளது. இதைத் தொடர்ந்து குளத்தின் மதவிற்கு அருகே ஒரு வட்ட எழுத்து கல்வெட்டு வெளியே தென்பட்டது. இதனை தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி மற்றும் தென்பொதிகை குடும்பன், கோபால் குமார் மற்றும் ராஜசேகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து ஆய்வு செய்ததில் இது கி.பி. 10-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும் பாண்டிய பேரரசர் மூன்றாம் நரசிம்ம பாண்டியரின் 14 ஆம் ஆட்சி ஆண்டில் கிபி 914 இல் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தென் வார நாட்டுக் கிழவன் இதனை அமைத்துள்ளார். மொத்தம் 8 வரிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக வேளாண்மைக்காக ஏரி குளங்கள் வெட்டுவதும் நீர் மேலாண்மைக்காக அதில் தூம்பு அமைத்து அது பற்றிய செய்திகளை கல்லில் பதிப்பதும் பண்டைய காலத்தில் தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதையொட்டி தான் இந்த கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது என இதில் பதிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் கூறுகிறது.

இதனை எட்டிமாறன் என்பவர் அமைத்ததாகவும் குளக்கரை மதகில் இருந்து 75 அடி தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 75 சென்டிமீட்டர் இடைவெளி உள்ள குமுளி தூண்கள் இரண்டும் ஐந்து அடி அகலம் கொண்ட மதகு காலும் கரை மதகை இணைக்கின்றன. இதனை அவ்வழியை செல்லும் பெரும்பாலானோர் பார்த்து செல்கிறார்கள்.

Updated On: 26 May 2023 5:31 AM GMT

Related News

Latest News

  1. தஞ்சாவூர்
    தஞ்சையில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி
  2. தமிழ்நாடு
    அரிசிக்கொம்பனை மூர்க்கமாக்கியது யார்...?
  3. தஞ்சாவூர்
    தஞ்சை மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
  4. தமிழ்நாடு
    விற்பனை வாகன அங்காடி: மாற்றுத்திறனாளிக ளுக்கு மாவட்ட நிர்வாகம்...
  5. உலகம்
    வெறுங்கையை வீசிக்கிட்டு போய் இனி பொருள் வாங்கலாம்
  6. உலகம்
    27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் உலக அழகி போட்டி
  7. இந்தியா
    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளுக்கு திருமணம்
  8. தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் ”சிறுதானிய உணவகம்” அமைக்க ரூ 5 லட்சம் ஒதுக்கீடு
  9. வந்தவாசி
    பேருந்து நிலைய டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ: பயணிகள் அலறியடித்து...
  10. நாமக்கல்
    நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வருகிற 15ம் தேதி சமரச பேச்சுவார்த்தை...