/* */

இன்று முதல் தென்காசி மாவட்ட வழியாக இயக்கப்படும் ரயில்கள் விபரம்..

Tenkasi to Palani Train Time Table-கோவில்பட்டி - துலுக்கப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை பாதை பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

இன்று முதல் தென்காசி மாவட்ட வழியாக இயக்கப்படும் ரயில்கள் விபரம்..
X

Tenkasi to Palani Train Time Table-கோவில்பட்டி - துலுக்கப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

1. மார்ச் 25 முதல் 29 வரை மற்றும் ஏப்ரல் 1 ஆகிய நாட்களில் தாம்பரத்திலிருந்து புறப்படும் தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (16191) விருதுநகர் - நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கிடையே பகுதியாக ரத்து செய்யப்படும். மேலும் மார்ச் 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் மதுரை - நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

2. மறுமார்க்கத்தில் மார்ச் 26 முதல் 30 வரை மற்றும் ஏப்ரல் 2 அன்று நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (16192) நாகர்கோயில் - விருதுநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். மேலும் மார்ச் 31 ஏப்ரல் 1 ஆகிய நாட்களில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (16192) நாகர்கோவில் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதுரையிலிருந்து வழக்கமான நேரத்தில் புறப்படும்.

3. மார்ச் 26 முதல் ஏப்ரல் 2 தேதி வரை நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில் - கோயம்புத்தூர் பகல் நேர எக்ஸ்பிரஸ் (16321) நாகர்கோவில் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

4. மார்ச் 26 முதல் ஏப்ரல் 2 வரை கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் கோயம்புத்தூர் - நாகர்கோவில் பகல் நேர எக்ஸ்பிரஸ் (16322) மதுரை - நாகர்கோவில் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

5. மார்ச் 25 முதல் 31 வரை குருவாயூரிலிருந்து புறப்பட வேண்டிய குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16128) திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. ஏப்ரல் 1 அன்று குருவாயூரில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எக்ஸ்பிரஸ் (16128) அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

6. மார்ச் 26 முதல் ஏப்ரல் 1 வரை சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127) சென்னை - திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

7. மார்ச் 26 முதல் ஏப்ரல் 2 வரை திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (22627/ 22628) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

8. மார்ச் 26 முதல் ஏப்ரல் 2 வரை பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு எக்ஸ்பிரஸ் (16731/ 16732) விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, அம்பாசமுத்திரம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

9. மார்ச் 28 முதல் ஏப்ரல் 2 வரை மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை - புனலூர் எக்ஸ்பிரஸ் (16729) மதுரை - திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் மார்ச் 28 முதல் ஏப்ரல் 1 வரை புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய புனலூர் - மதுரை எக்ஸ்பிரஸ் (16730) திருநெல்வேலி - மதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

10. மார்ச் 28 முதல் ஏப்ரல் 1 வரை மைசூரில் இருந்து புறப்பட வேண்டிய மைசூர் - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் (16236) விருதுநகர் - தூத்துக்குடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் மார்ச் 29 முதல் ஏப்ரல் 2 வரை தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ் (16235) தூத்துக்குடி - விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

11. மார்ச் 26, 29, 30 ஆகிய நாட்களில் மும்பை தாதரிலிருந்து புறப்படும் தாதர் - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் (11021) விருதுநகர் - திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் மார்ச் 28, 31 ஏப்ரல் 1 ஆகிய நாட்களில் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் திருநெல்வேலி - தாதர் எக்ஸ்பிரஸ் (11022) திருநெல்வேலி - விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது

12. மார்ச் 27 அன்று புதுச்சேரியில் இருந்து புறப்பட வேண்டிய புதுச்சேரி - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (16861) மற்றும் மார்ச் 28 அன்று கன்னியாகுமரி இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் (16862) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

13. மார்ச் 22 மதுரை கோட்ட பகுதியில் வரும் காஷ்மீர் ஸ்ரீ வைஷ்ணவ தேவி கட்ரா - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் (16788) விருதுநகர், தென்காசி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 26 March 2024 6:21 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...