/* */

அனைத்து காவல் நிலையங்களிலும் சைபர் குற்றங்களுக்கு தனி அதிகாரிகள் நியமனம்

அனைத்து காவல் நிலையங்களிலும் சைபர் குற்றங்களுக்கு தனி அதிகாரிகள் நியமனம் செய்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

அனைத்து காவல் நிலையங்களிலும் சைபர் குற்றங்களுக்கு தனி அதிகாரிகள் நியமனம்
X

சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையில் பொதுமக்களிடம் சைபர் கிரைம் புகார்களை பெற்று உடனடியாக ஆன்லைனில் புகாரை அளிப்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. 

தமிழக காவல் துறையில் புதிதாக சைபர் கிரைம் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு அந்தந்த மாவட்ட தலைமையகத்தில் செயல்பட்டு வருகிறது.

இதனால் பொதுமக்கள் புகார் அளிப்பதற்காக அந்தந்த தலைமையகத்தின் செயல்பட்டு வரும் சைபர் காவல் நிலையம் வந்து புகார் அளிக்கின்றனர்.

பொது மக்கள் சைபர் கிரைம் தொடர்பான புகார்களை தங்கள் அருகிலுள்ள காவல் நிலையங்களில் உடனுக்குடன் அளிக்கும் வகையிலும், நீண்ட தூர பயணம் செய்து தலைமையகத்தில் புகார் அளிப்பதை தவிர்க்கவும், பொது மக்களுக்கு உதவியாக அனைத்து காவல் நிலையங்களிலும் புதிதாக Cyber Support Officers நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது.

இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க சிறப்பு உதவி ஆய்வாளர், முதல் நிலை காவலர் மற்றும் இரண்டாம் நிலை காவலர் உட்பட 3 Cyber Support officers நியமிக்கப்பட்டுள்ளனர். நியமிக்கப்பட்ட Cyber Support Officers களுக்கு சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையில், பொதுமக்களிடம் சைபர் கிரைம் புகார்களை பெற்று உடனடியாக ஆன்லைனில் புகாரை அளிப்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காவல் துறையினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

Updated On: 2 Jun 2022 6:23 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  9. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!