/* */

கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் திருட்டு: 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது

Police Arrest -கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 4 பேரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் திருட்டு: 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது
X

சிசிடிவியில் பதிவான காட்சி.

Police Arrest -கடையநல்லூர் தேசிய நெடுஞ்சாலை சப் ரிஜிஸ்டர் அலுவலகம் எதிரில், தனியார் நிறுவனத்தின் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த 5-ஆம் தேதி மாலை 6:30 மணியளவில், தங்க மோதிரம் கம்மல் வாங்க இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் சென்றுள்ளனர். அப்போது கடையில் செயின் மற்றும் கம்மல் மோதிரத்தின் வகைகளை நான்கு பேரும் பார்த்துக் கொண்டிருந்தபோது, 8 கிராம் எடைகொண்ட தங்க மோதிரம் ஒன்று மாயமாகியுள்ளது.

சந்தேகமடைந்த கடையின் விற்பனையாளர், கடையில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை பார்த்த பொழுது நான்கு பேரும் நகையை எடுத்து சென்றது தெரியவந்தது. இது குறித்து கடையின் உரிமையாளர் கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் குமந்தாபுரம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது இரண்டு பைக்கில் நான்கு பேர்கள் வந்தனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார். அப்போது கடையநல்லூர் நகைக்கடையில் பதிவு செய்யப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்ட நபரும் இந்த நான்கு பேர்களும் ஒன்று என தெரிய வந்தது. மேலும் நான்கு பேரும் முன்னுக்குப்பின் முரணான தகவல் அளித்துள்ளனர்.

நான்கு பேரிடமும் காவல் துறையினர் கிடுக்கு பிடி விசாரணை நடத்தியதில் இவர்கள் வாசுதேவநல்லூர் கோவில் திருவிழாவில் பக்தர்களிடம் 112 கிராம் செயினை திருடியதும், கடையநல்லூர் நகைக்கடையில் 8 கிராம் மோதிரம் திருடியதும் தெரிய வந்தது.

இதையடுத்து, வழக்கு பதிவு செய்து, ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியை சேர்ந்த முனியசாமி நாயுடு மகன் ஜெயபால் வயது (61 ), சுந்தரபாண்டியபுரம் ஆனந்தா நகர் மாந்தோப்பு ஸ்கூல் தெருவில் வசிக்கும் கருப்பசாமி மகன் சண்முகராஜ் வயது (40 ), சாயல்குடி அண்ணா நகர் சந்தனம் மனைவி லட்சுமி வயது( 65), பரமக்குடி அய்யனார் கோவில் தெருவில் வசிக்கும் சுந்தர் மனைவி சுந்தரி வயது (65) ஆகியோரை கைது செய்து இவர்களிடமிருந்து 120 கிராம் தங்க நகையை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 Sep 2022 9:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  2. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  3. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  4. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  5. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  6. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  8. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  9. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    நட்பு முறிவு கவிதைகள்...!