/* */

கடையநல்லூரில் வயது முதிர்வின் காரணமாக பெண் யானை உயிரிழப்பு

கடையநல்லூரில் வயது முதிர்வின் காரணமாக பெண் யானை உயிரிழப்பு

HIGHLIGHTS

கடையநல்லூரில் வயது முதிர்வின் காரணமாக பெண் யானை உயிரிழப்பு
X

கடையநல்லூரில் வயது முதிர்வின் காரணமாக பெண் யானை இறந்தது. வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் யானையின்‌ உடல்‌ பிரேத பரிசோதனை செய்து சம்பவ இடத்திலேயே அடக்கம்‌ செய்யப்பட்டது.

திருநெல்வேலி வனக்கோட்டம்‌, கடையநல்லூர்‌ வனச்சாகம்‌, கடையநல்லலூர்‌ பிரிவிற்குட்பட்ட சொக்கம்பட்டியைச்‌ சேர்ந்த முகம்மதுபாதுஷா என்பவர்‌ வளர்த்து வந்த லெட்சுமி என்ற பெண் யானை (வயது 53), வயது முதிர்வின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மங்களாபுரத்திற்கு அடுத்த வேலாயுதபுரத்தில்‌ வைத்து இறந்து விட்டது.

இது குறித்து சம்பவ இடத்திற்கு கடையநல்லூர்‌ வனச்சரக அலுவலர்‌ சுரேஷ்‌, கடையநல்லூர்‌ பிரிவு வனவர்‌ முருகேசன்‌, சிறப்பு பணி வனவர்‌ செல்லத்துரை மற்றும்‌ வனக்காப்பாளர்கள்‌ இராமச்சந்திரன்‌, ராஜா, மாதவன்‌, வனக்காவலர்‌ ஆனந்த்‌ மற்றும்‌ வேட்டைத்தடுப்புக்காவலர்கள்‌ ஆகியோர்‌ விரைந்தனர்.

இந்நிலையில் மாவட்ட வன அலுவலர்‌ இரா.முருகன்‌ முன்னிலையில்‌ மற்றும்‌ திருநெல்வேலி தலைமையிடத்து உதவி வனப்பாதுகாவலர்‌ சா.ஷாநவாஸ்கான்‌ மற்றும்‌ திருநெல்வேலி மாவட்ட கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவ ஆராய்ச்சி மையம்‌ துணைத்தலைவர்‌ மரு. முத்துக்கிருஷ்ணன்‌ மற்றும்‌ நோய்‌ பிரிவியல்‌ துறை துணை பேராசிரியர்‌ மரு.குமார்‌, வனக்கால்நடை மருத்துவக்குழு ஆய்வாளர்‌ உ.அர்னால்டு வினோத்‌, வனஉயிர்‌ மற்றும்‌ இயற்கை அறக்கட்டளை தலைவர்‌ ஷேக்‌ உசேன்‌ ஆகியோர்‌ முன்னிலையில்‌ யானையின்‌ உடல்‌ பிரேத பரிசோதனை செய்து சம்பவ இடத்திலேயே அடக்கம்‌ செய்யப்பட்டது.

Updated On: 25 Dec 2021 12:59 PM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்