/* */

சிவகங்கையில் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில், நடைபெற்ற 26-வது மாபெரும்கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

சிவகங்கையில் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் ஆய்வு
X

சிவகங்கை மாவட்டத்தில், நடைபெற்ற 26-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்ப.மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட நேருநகர், பள்ளிவாசல் அருகில் இன்று (26.03.2022) நடைபெற்ற 26-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்ப.மதுசூதன் ரெட்டி,

பார்வையிட்டு ஆய்வு செய்தபின்னர் கூறியதாவது:தமிழகத்தில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றினை கட்டுப்படுத்திடவும், பரவாமல் தடுத்திடவும் தமிழ்நா டு முதலமைச்சர், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் , உத்தரவின்படி, 12.09.2022 முதல் கொரோனா நோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட 25 கொரோனா தடுப்பூசி முகாம்களின் மூலம் 6,96,182 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இன்று 26-வது கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

கடந்த 16.01.2022 முதல் 25.03.2022 வரை முதல் தவணை தடுப்பூசி 19,03,370 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 18 வயது மேற்பட்டோர்களின் முதல் தவணையாக 9,86,085 நபர்களுக்கும், இரண்டாம் தவiணையாக 8,12,566 நபர்களுக்கும், 15வயது முதல் 18 வயதிற்குட்பட்டவர்களில் முதல் தவணையாக 53,672 நபர்களுக்கும், இரண்டாம் தவணையாக 26,337 நபர்களுக்கும், 12 வயது முதல் 14 வயதிற்குட்பட்டவர்களில் 24,145 நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை தடுப்பூசியாக 10.01.2022 முதல் 7,967 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

அதனைத்தொடர்ந்து, தமிழக அரசின் உத்தரவின்படி, இன்றைய தினம் சிவகங்கை மாவட்டத்தில் 26-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு, 65 முகாம்கள் நகராட்சிப்பகுதிகளிலும், 585 முகாம்கள் ஊரக மற்றும் பேரூராட்சிப் பகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 650 இடங்கள் தெரிவு செய்யப்பட்டு, 47,000 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 19,500 கோவாக்சின் தடுப்பூசிகளும், 20,000 கோர்பிவேக்ஸ் தடுப்பூசிகளும் என மொத்தம் 86,500 தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

கொரோனா நோய்த்தொற்றில் இருந்து முழுமையான பாதுகாப்பு பெற 12 வயதிற்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை அவசியம் செலுத்திக் கொண்டு அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்றார் ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி. ஆய்வின்போது, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ச.ராம்கணேஷ், மருத்துவர் ஆர்.கலாவதி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 March 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....