சிவகங்கை: தமிழக வாழ்வுரிமை கட்சியின் கையெழுத்து இயக்கத்துக்கு நடிகர் ஆதரவு

சிவகங்கையைச்சேர்ந்தவரும் மேதகு திரைப்படத்தின் நடிகருமான குட்டிமணி தனது கையெழுத்திட்டு பொதுமக்களின் ஆதரவைத் திரட்டினார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிவகங்கை: தமிழக வாழ்வுரிமை கட்சியின் கையெழுத்து இயக்கத்துக்கு நடிகர் ஆதரவு
X

தமிழக வாழ்வுரிமைக்கட்சி சார்பில் சிவகங்கையில் நடைபெற்ற கையெழுத்து இயக்ககத்துக்கு ஆதரவு திரட்டிய மேதகு திரைப்பட நடிகர் குட்டிமணி

சிவகங்கையில் சட்டக் கல்லூரி அமைக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் நடத்திய கையெழுத்து இயக்கத்துக்கு நடிகர் ஆதரவு தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

சிவகங்கை நகரில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடியும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரமும் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, காரைக்குடிக்கு சட்டமன்ற கல்லூரி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன் காரணமாக சிவகங்கைக்கு வரவேண்டிய சட்டக்கல்லூரி, காரைக்குடியில் அமையும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு தரப்பு மக்களும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று சிவகங்கை பேருந்து நிலையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக, சிவகங்கையில் சட்டக் கல்லூரி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கையெழுத்திட்டு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதில், சிவகங்கை நகரைச் சேர்ந்தவரும் மேதகு திரைப்படத்தின் நடிகருமான குட்டிமணி தனது கையெழுத்திட்டு பொதுமக்களின் ஆதரவைத் திரட்டினார்.

Updated On: 5 Oct 2021 10:52 AM GMT

Related News