/* */

மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் உட்பட 94 பேருக்கு கொரோனா : பரவல் 5.5 % அதிகரிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் எஸ்பி, ஏடிஎஸ்பி, டிஎஸ்பி உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

மாவட்ட  உயர் போலீஸ் அதிகாரிகள் உட்பட 94 பேருக்கு கொரோனா : பரவல் 5.5 % அதிகரிப்பு
X

சிவகங்கை மருத்துவமனையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர்

சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமாருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்ட மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அன்பு மற்றும் சிவகங்கை தாலுகா டிஎஸ்பி பால்பாண்டி உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் உட்பட ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில்கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஜனவரி துவக்கத்தில் கொரோனா பரவல் 0.8 மட்டுமே இருந்தது. தற்போது 5.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், சமூக இடைவெளி முகக்கவசம் அணிந்து செல்வது அவசியம் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் பரிசோதனையில் சிவகங்கை சுகாதார துணை இயக்குனர் மற்றும் 4 டாக்டர்கள் உட்பட 94 பேருக்கு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கெனவே டிஎஸ்பி போலீஸ் என முன் களப்பணியில் ஈடுபட்டுள்ள பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 22 Jan 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  4. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  8. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  9. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  10. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...