கோ- ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை: மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைப்பு

சிவகங்கை மாவட்ட கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்கள் மூலம் நடப்பாண்டில் தலா 90 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கோ- ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை: மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைப்பு
X

சிவகங்கை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையைத் தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி

கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி தொடங்கி வைத்தார்

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை மற்றும் காரைக்குடி பகுதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்களில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை, மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார்

பின்னர் ஆட்சியர் கூறியதாவது:சிவகங்கை மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்களம் மூலம் நடப்பாண்டில் தலா 90 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் செட்டிநாடு சேலைகள், காட்டன் சுங்கடி சேலைகள் நவக்கிரஹா காட்டன் சேலைகள், மதுரை, தஞ்சாவூர் காட்டன் சேலைகள் உள்பட பல்வேறு ரகங்கங்களில் பெண்களை கவரும் விதமாக குவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆடவர்களுக்கான காட்டன் சட்டைகள் தூய பருத்தி காட்டன் சட்டைகள், குர்தீஸ் மற்றும் கண்கவர் டிசைன்கள் குவிக்கப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர்..நிகழ்வில், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் மோகன்குமார், மேலாளர் நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Oct 2021 5:15 AM GMT

Related News