உயிரிழந்த மாணவி உடலை வாங்க மறுத்து போராட்டம்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
உயிரிழந்த மாணவி உடலை வாங்க மறுத்து போராட்டம்
X

சிவகங்கையில் செயல்பட்டு வரும் தனியார் கிளினிக்கில் வயிற்று வலிக்காக சிகிச்சை பெற்ற 11 ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்த உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கையை அடுத்துள்ள சக்கந்தி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் கணேசன், சித்ரா தம்பதி. இவர்களது 16 வயது மகள் சிவகங்கையில் உள்ள பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வரும் நிலையில் நேற்று காலை திடீரென வயிற்று வலி மற்றும் வாந்தி எடுத்ததன் காரணமாக சிவகங்கையில் உள்ள தனியார் கிளினிக்கில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு சுமார் 4 மணி நேர சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலை மோசமானதாக கூறி 108 ஆம்புலன்ஸ் மூலம் திவ்யாஸ்ரீயை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியதுடன் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அங்கேயே வைத்தனர். இதற்கிடையே தனியார் கிளினிக்கின் தவறுதலான சிகிச்சையினாலேயே மாணவி உயிரிழந்ததாக அவரது பெற்றோர் சிவகங்கை நகர போலீசில் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று மாணவியின் உடல் பிரேத பரிசோதனை முடிவுற்ற நிலையில் தங்களது மகளின் இறப்பிற்கான காரணம் என்ன என தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன் தனியார் கிளீனிக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் பல மணிநேரம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் உடலை வாங்கி செல்ல மறுத்து பிரேத பரிசோதனை அறையிலேயே விட்டு சென்றனர்.

Updated On: 2021-03-12T19:53:32+05:30

Related News