/* */

சாலையில் சுற்றித்திரியும் மன நலம் பாதித்தவர்களுக்கு சிகிச்சை: ஆட்சியர் ஆய்வு

District Collector- சாலையில் சுற்றித்திரியும் மன நலம் பாதித்தவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

சாலையில் சுற்றித்திரியும் மன நலம் பாதித்தவர்களுக்கு சிகிச்சை: ஆட்சியர் ஆய்வு
X

மனம்நல பிணியால் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித் திரிந்தவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப. மதுசூதன்ரெட்டி தலைமையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டம் :

District Collector- மனம்நல பிணியால் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித் திரிந்தவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த கலந்தாய்வுக் கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மனநல பிணியால் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித் திரிந்தவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. கலந்தாய்வுக் கூட்டத்தில், மனநல சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துரையாடினார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது:மனநல பிணியால் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி சாலையில் வசிக்கும் நபர்களை மீட்டு அவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய தேவைகள் குறித்து வரைவுக் கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியினை ,அரசு சார்ந்த துறைகள், காவல்துறை, உள்ளாட்சி அமைப்புக்கள், உள்ளுர் அரசு சாரா அமைப்புக்கள் மூலம் மேற்கொள்வதற்கு குழு அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன.

மனநல பிணியால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்கள், இரயில் நிலையங்கள், சந்தைகள், பேருந்து நிலையங்களில் இருக்கும் பட்சத்தில் அவர்களை மீட்டு, சிகிச்சை அளிக்கவும், இவர்கள் குறித்து வெளியூர் தகவல் பெற ஒரு பொது தொலைபேசி எண்ணை அமைத்திடவும், மீட்பு இல்லங்களில் தங்க வைக்கும் போது அவர்கள் குறித்த விவரங்களை காவல் நிலையத்தில் பதிவு செய்திடவும், மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்திட படுக்கை வசதிகள் ஏற்படுத்தவும், இவர்களுககு ஆதார் எண் வழங்கிடவும், பொது விநியோக அட்டை வழங்கவும், பராமரிப்பு உதவித்தொகை அரசு மூலம் பெற்று வழங்கிட வேண்டும்.

உடல் உறுப்புக்கள் ஏதேனும் பாதிப்படைந்திருந்தால் அதற்கான தகுந்த சிகிச்சை அளித்து மனம் பூரண குணமடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.நலம் பெற்றவர்கள் சிகிச்சைக்கான மருந்து, மாத்திரைகள் தொடர்ந்து உட்கொள்வதை கண்காணித்திட வேண்டும். அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் இயல்பாக இருப்பதை துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சீமைச்சாமி, இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு.இளங்கோ மகேஸ்வரன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.ரேவதி, மனநல மருத்துவர் மரு.நிர்மல் நிவேதா, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புக்களை சேர்ந்தவர்கள்; உட்பட பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 July 2022 10:37 AM GMT

Related News