/* */

அரிசி சேமிப்பில் கிடங்கில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆய்வு

நியாய விலைக் கடைகளுக்கு தேவையான அரிசி, பருப்பு , சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பப்படுவது குறித்து ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

அரிசி சேமிப்பில்  கிடங்கில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆய்வு
X

 உத்திரமேரூர் அடுத்த வேடபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள நுகர்வோர் வாணிப கழக இடங்களில் அரிசியின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி.

காஞ்சிபுரம் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் விவசாயிகளின் நெல் மூட்டைகள், உத்திரமேரூர் அடுத்த வேடபாளையம் பகுதியில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருப்பு வைக்கப்படுகிறது.

இதனை நவீன அரிசி ஆலைகள் மூலம் அரிசி உற்பத்தி செய்யப்பட்டு, மீண்டும் அங்கிருந்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு நியாய விலை கடைகளுக்கு அரிசி, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களும் நியாய விலை கடைகளுக்கு வேடப்பாளையத்தில் இருந்து அனுப்புவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தரமற்ற அரிசிகள் நியாய விலை கடைகளில் வழங்குவதாக முதல்வரிடம் நேரடியாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சிறப்பு குழுவினர், அரிசி பருப்பு உள்ளிட்ட பொருள்களின் தரத்தினை உறுதி செய்து, அந்தந்த நியாய விலை கடைக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டனர்.

அவ்வகையில் இன்று வேடபாளையம் பகுதியில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, திடீர் ஆய்வு மேற்கொண்டு அரிசியின் தரம் , இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.மேலும் சிறப்பு குழுவினரிடம் முறையாக ஆய்வு செய்து அனைத்து நியாய விலைக் கடைகளும் பொருட்கள் அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.


Updated On: 19 July 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  2. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  3. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  7. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  8. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்