/* */

தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது: கார்த்தி சிதம்பரம் கவலை

தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் கொலை சம்பவங்கள் அதிர்ச்சி அளிப்பதாக, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது: கார்த்தி சிதம்பரம் கவலை
X

இது தொடர்பாக, சிவகங்கை மாவட்டம் கண்டனூரில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கார்த்தி சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்தியாவில் இருந்து பிரதமரும், மத்திய அமைச்சர்களும் அடிக்கடி வெளிநாடு சென்றால் தான், நம்மீது உலகப்பார்வை வரும். அந்த வகையில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றதை வரவேற்கிறேன். அதே நேரம், வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவை பற்றி கூறும் கசப்பான உண்மைகளையும் பிரதமர் கேட்டு நடக்க வேண்டும்.

மத்திய அரசு எடுத்த தவறான பொருளாதார கொள்கையினால், மோடியும், நிர்மலா சீதாராமனும் ஆட்சியில் இருக்கும் வரை பெட்ரோல், டீசல் விலை குறையவே குறையாது. உள்துறை அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி நீதிமன்ற வளாகத்திலேயே, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பது மத்திய அரசின் நிர்வாக சீர்கேட்டை காட்டுகிறது.

தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கொலை சம்பவங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு, காவல்துறையின் மூலம் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். குற்றவாளிகளை கண்டுபிடித்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Updated On: 26 Sep 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  2. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  3. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  4. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  5. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  7. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
  9. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  10. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...