/* */

மலைவாழ் மக்கள் பயன்பாட்டுக்கு 2 ஆக்சிஜன் செரிவூட்டிகள் வழங்கல்

கம்மாளப்பட்டியில் உள்ள மலைவாழ் மக்களின் பயன்பாட்டுக்காக, 2 ஆக்சிஜன் செரிவூட்டிகளை சேலம் எம்பி பார்த்திபன் வழங்கினார்.

HIGHLIGHTS

மலைவாழ் மக்கள் பயன்பாட்டுக்கு 2 ஆக்சிஜன் செரிவூட்டிகள் வழங்கல்
X

கம்மாளப்பட்டியில் உள்ள மலைவாழ் மக்களின் பயன்பாட்டுக்காக 2 ஆக்சிஜன் செரிவூட்டிகளை, சேலம் எம்பி பார்த்திபன் வழங்கினார்.

சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. ஏராளமானோர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்சிஜன் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்நிலையில் கம்மாளப்பட்டியில் உள்ள மலைவாழ் மக்களின் பயன்பாட்டுக்காக, பாரதியார் மக்கள்நல்வாழ்வு சங்கம் சார்பில் , அப்பகுதியில் செயல்பட்டு வரும் 10 படுக்கைகள் கொண்ட மலைவாழ் மக்களின் மருத்துவமனைக்கு, இந்தியவாழ் தாய்வான் மக்கள் மற்றும் இந்தியன் தமிழ் சங்கம் சார்பில் வழங்கிய, 2 ஆக்சிஜன் செறிவூட்டிகளை, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் வழங்கினார்.

இதன்மூலம் வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட கம்மாளப்பட்டி, தும்மல்பட்டி, குரால் நத்தம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரம் மலைவாழ் மக்கள், யாருக்கேனும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் தேவை ஏற்பட்டால், அவர்களுக்கு இந்த கருவி மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்படுவார்கள் என, பாரதியார் மக்கள்நல்வாழ்வு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Updated On: 31 May 2021 12:58 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!