Begin typing your search above and press return to search.
தொடர் மழை : சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தொடர் மழையால், சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வந்தது. நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், பிற்பகலில் இருந்து மழை பெய்து வந்தது.
இந்நிலையில், தொடர்ந்து இரவு முழுவதும் மழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று(12.11.2021) சேலம் மாவட்டத்தில், அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார்.