/* */

சேலம் மருத்துவமனையில் அதிமுக மற்றும் பா.ம.க எம்எல்ஏக்கள் ஆய்வு

சேலம் அரசு மருத்துவமனையில் அதிமுக மற்றும் பாட்டாளி மக்கள் எம்எல்ஏக்கள் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

சேலம் மருத்துவமனையில் அதிமுக மற்றும் பா.ம.க  எம்எல்ஏக்கள்  ஆய்வு
X

சேலம் தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியன், வீரபாண்டி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜமுத்து, சேலம் மேற்கு தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆகியோர் இன்றைய தினம் சேலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து அரசு மருத்துவமனை முதல்வர் முருகேசனிடம் ஆலோசனை நடத்திய அவர்கள், கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியன், கூறியதாவது.

சேலம் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இல்லை என்று திமுகவை சேர்ந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். ஆனால் அதற்கு மாறான நிலைமை தற்போது நிலவி வருகிறது என்றார்.

கடந்த அதிமுக ஆட்சியில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 9 லட்சத்து 40 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 2 கோடியே 48 லட்சம்பேர் பரிசோதனை செய்து அதில் 15 லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு கொரோனா சிகிச்சை முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது என்றார்.

அப்போது மாநிலத்தின் கொரோனா தாக்கம் நாள் ஒன்றுக்கு 8 ஆயிரம் வரை இருந்தது. ஆனால் தற்போது 30 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. இது இன்னும் சில நாட்களில் ஒரு லட்சத்தை எட்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்த சூழலில் காய்ச்சல் முகாம் வீடுவீடாக சென்று நடத்தினால் மட்டுமே பொதுமக்கள் வெளியே வருவது குறையும். ஆனால் தற்போது முழு ஊரடங்கு என்பது பெயரளவுதான் உள்ளது.

ஊரடங்கை முழுமையாக அமல்படுத்தப்பட்டால் மட்டுமே கொரோனா சங்கிலி உடைக்கப்படும் என்றார். கடந்த அதிமுக ஆட்சியில் சென்னையில் மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் தற்போது ஏ சிம்ட்டம்ஸ் உள்ளவர்களுக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு 8 ஆயிரமாக இருந்தபோது என்ன படுக்கை வசதி இருந்ததோ அதே வசதிதான் தற்போது நாள் ஒன்றுக்கு 30 ஆயிரமாக உயர்ந்தபோதும் உள்ளது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Updated On: 15 May 2021 2:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!