/* */

சேலம் காவடி பழனியாண்டவர் கோயிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வாசனை மலர்களால் முருகபெருமான் முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார்

HIGHLIGHTS

சேலம் காவடி பழனியாண்டவர் கோயிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
X

சேலம் காவடி பழனியாண்டவர் திருக்கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது

சேலம் காவடி பழனியாண்டவர் திருக்கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ் கடவுளான முருகபெருமானுக்கு எத்தனையோ விழாக்கள் கொண்டாப்பட்டாலும் தமிழ் மாதத்தில் வரும் பங்குனி மாதம் முருகபெருமானுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. பங்குனி உத்திரம் வருகின்ற 18ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு இன்று முதல் 18ஆம் தேதி வரை பல்வேறு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறுகிறது. பங்குனி உத்திர திருவிழா முன்னிட்டு பழனி உட்பட அறுபடை வீடுகளிலும் இன்று காலை முதலே முருகனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சேலம் மாவட்டத்திலும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

சேலம் ஜங்ஷன் பகுதியில் அமைந்துள்ள அருள் மிகு காவடி பழனியாண்டவர் கோயிலில் பங்குனி உத்திர கொடியேற்றும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக முருகபெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு வாசனை மலர்களால் முருகபெருமான் முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார். இந்நிலையில் முருக பக்தர்கள் தங்களது குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், குழந்தை வரம் வேண்டியும், திருமண நடக்க வேண்டியும், பல்வேறு வேண்டுதல்கள், நிறைவேறிய பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினர்.

குறிப்பாக பால்காவடி பன்னீர் காவடி புஷ்ப காவடி என பல்வேறு விதமான காவடிகளை எடுத்து தாளத்திற்கு தகுந்த வாறு நடனமாடி முருகபெருமானுக்கு தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து கோயிலின் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க மங்கள வாத்தியம் இசைக்க குருக்கள் வேதங்கள் ஓத கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது. இந்த வைபவத்தை காண அப்பகுதியில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று முதல் தொடர்ந்து 18ஆம் தேதி வரை பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு 18 ஆம் தேதி பங்குனி உத்திர நாளில் 1008 பால்குட ஊர்வலம் நடைபெறுகிறது .

Updated On: 10 March 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  2. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  3. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  4. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  5. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  7. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
  9. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  10. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...