/* */

சேலத்தில் மத்தியப் பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கான இலவசப்பயிற்சி வகுப்புகள்

சேலத்தில் மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்விற்கு இலவசப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.

HIGHLIGHTS

சேலத்தில் மத்தியப் பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கான இலவசப்பயிற்சி வகுப்புகள்
X

பைல் படம்.

மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்விற்கு. சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இலவசப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்ததாவது:

மந்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் (SSC) 12523 MTS (Multi Tasking Non-Technical Staff) காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு www.ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் 17.02.2023 ஆகும்.

இத்தேர்விற்கான கல்வித்தகுதி, பத்தாம் வகுப்பு (10th) தேர்ச்சி ஆகும். மேலும், 01.01.2023 அன்றைய நிலையில் எஸ்சி. எஸ்டி பிரிவினர் 30 வயதுக்குள்ளும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 28 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின் படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணமாக ரூபாய் 100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள், எஸ்.சி. எஸ்டி வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்வினை தமிழ் மொழியிலும் எழுத மத்தியப் பணியாளர் தேர்வாணையம் அனுமதித்துள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சார்ந்த தகுதியும் விருப்பமும் உள்ள பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் அதிக அளவில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சேவை மையம் (Facilitation Centre) அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 06.02.2023 அன்றுகாலை 10.00 மணியளவில் இலவசப் பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளன.

இது தொடர்பான விவரங்களுக்கு 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது 9499055041 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

சேலம் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் அதிக அளவில் இத்தேர்விற்கு விண்ணப்பிக்குமாறும், இலவசப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 31 Jan 2023 3:43 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  5. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  9. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  10. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்