/* */

பாலாறு அணைக்கட்டில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு 1 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்

பாலாறு அணைக்கட்டிலிருந்து 1லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் கரையோரப் பகுதியில் வசிப்பவர்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

HIGHLIGHTS

பாலாறு அணைக்கட்டில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு 1 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்
X

பாலாறு அணைக்கட்டில் திறந்து விடப்பட்ட நீர் பாய்ந்தோடி வருகிறது

இராணிப்பேட்டை மாவட்டத்தை யொட்டியுள்ள பொன்னையாற்றிலிருந்து பெரும் வெள்ளப்பெருக்கு பாலாற்றிற்கு தொடர்ந்து வருவதால் வாலாஜா பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது.

இதனால் அணைக்கட்டில் கடந்த 100 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டுக்கடங்காத அளவில் சுமார் 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமான நீர் வரத்து காணப்பட்டது

இந்நிலையில் இராணிப்பேட்டை மாவட்டாட்சியர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நீர்வள ஆதாரத் துறை மற்றும் வருவாய் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார்.

ஆலோசனையின்படி, அணைக்கட்டில் இருந்து கடந்த 1903 ஆம் ஆண்டிற்கு பிறகு மிக அதிகப்படியான அளவான 1,04,054கன அடி வந்த உபரிநீராக அப்படியே வெளியேற்றம் செய்யப்பட்டது.

பின்னர். மாவட்ட ஆட்சியர் அதிகாலை 3 மணியளவில் அணைக்கட்டிற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது, பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை வருவாய் கோட்டாட்சியர் வட்டாட்சியர் மற்றும் காவல் துறை உடன் இருந்தனர்.

மேலும் ஆற்காடு பாலாற்றங்கரையில் அமைக்கப்பட்டிருந்த 30 தற்காலிக மொத்த காய்கறி விற்பனை அங்காடிகளை பாலாற்றில் வெள்ளம். சூழ்ந்ததையடுத்து கரையோர, காய்கறி கடைகள் மற்றும் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த வாகனங்கள் காய்கறி மூட்டைகள் மூழ்கி நிலையிலிருந்து மீட்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து, விஷாரம் பாலாற்றங் கரையோரமுள்ள சாதிக்பாட்சா நகர் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. உடனே குடியிருப்புகளில் வசித்து வரும் 1200க்கும் மேற்பட்டோர் மற்றும் 200 க்கும் மேற்பட்ட கால்நடைகள் பத்திரமாக மீட்கப்பட்டு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 19 Nov 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு