/* */

ராணிப்பேட்டை அருகே ரயில்வே பாலத்தில் விரிசல் :ஒரு வழிப்பாதையில் ரயில்கள் இயக்கம்

இராணிப்பேட்டை மாவட்டம் ஒட்டியுள்ள பொன்னை ஆற்று ராயில்வே பாலத்தில் விரிசல் ஏற்பட்டதின் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டு ஒருவழிபாதையில் இயக்கப்படுகிறது.

HIGHLIGHTS

ராணிப்பேட்டை அருகே ரயில்வே பாலத்தில் விரிசல் :ஒரு வழிப்பாதையில் ரயில்கள் இயக்கம்
X

ராணிப்பேட்டை அருகே விரிசல் ஏற்பட்ட ரயில்வே பாலம்.

கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக பொன்னை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து முகுந்தராயபுரம் -திருவலம் ரயில் நிலையங்களுக்கு இடையே பொன்னையாற்றில ரயில்வே பாலம் அமைந்துள்ளது. இது 1857 ஆண்டு கருங்கற்களால் கட்டப்பட்டது பாலத்தில் 55 கண்கள உள்ளன .சென்னை காட்பாடி- மார்க்கமாக இரயில்கள் இந்த பாலத்தில் இயக்கப்பட்டு வருகிறது . அதில் 38 வது கண்ணின் கீழ் விரிசல் ஏறபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ரயில்வே அதிகாரிகள் பொன்னை ஆற்று ரயில்வே பாலத்தை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் ஆற்று பாலத்தில் ரயில்கள் இயங்க தென்னக ரயில்வே தடைவிதித்தது .

அதைத் தொடர்ந்து சென்னை கோட்ட ஒருங்கிணைப்பு பொறியாளர் ராம் பிரசாத் ராவ் தலைமையிலான பொறியாளர் மற்றும் ஊழியர்கள் கொண்ட 60க்கும் மேற்பட்ட குழு முதற்கட்டப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாக்கு பைகளில் மணல் மட்டும் ஜல்லிகளை நிரப்பி பாலத்தின் கீழ் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மூட்டைகளை அடுக்கி மட்டப்படுத்தும் பணிகளை செய்து வருகின்றனர.

பின்னர் காலை சென்னையிலிருந்து பொறியாளர் குழுவினர் வந்து அடியில் இரும்பு தடுப்புகளை அமைத்து பாலத்தை ஸ்திரப்படுத்தும் பணிகளில் மேற்கொள்ளவுள்ளனர்.

இதனால் அரக்கோணம் காட்பாடி இடையே முகுந்தராயபுரம்-திருவலம் ரயில் நிலையங்களுக்கிடையே ஆற்று ராயில்வே பாலத்தில் விரில் சரிசெய்யும் முகத்ற்கட்ட பராமரிப்பு பணி காரணமாக சென்னையிலிருந்து மாலை 5.55 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை செல்லும் விரைவு ரயில், சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6.20க்கு புறப்பட்டு வேலூர் கண்டொன்மெட் செல்லும் மின்சார ரயில் மற்றும் அரக்கோணத்தில் மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை வரை செல்லும் மின்சார ரயில்கள் ரத்து என தகவல். முன் அறிவிப்பின்றி திடீரென ரயி்கள் ரத்து செய்யப்பட்டதால் பணி முடித்து வீடு திரும்பும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்கள்.

காட்பாடியிலிருந்து அரக்கோணம் வழியாக சென்னை நோக்கி லவரும் ரயில் பாதையில் பொன்னை ஆற்று ரயில்வே பாலத்தில் சென்னையிலிருந்து கட்பாடி (down line)மார்கமக்க செல்லும் ரயில் பதை முடக்கப்படு கட்பாடி முதல் சென்னை (upline)வரை செல்லும் ரயில் பாதை ஒரு வழி பாதையில் அனைத்து ரயில்களும் இயக்கப்படுகிறது

ரயில்கள் அங்கங்கே பாதி வழியில் நிறுத்தி காலதாமதமாக செல்கின்றன. இதனால் பயணிகள் கடும் அவதிககுள்ளாகி உள்ளனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 23 Dec 2021 4:29 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  4. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  5. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  6. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  7. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  8. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  9. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!