/* */

இந்தியாவிலேயே சாலை விபத்தில் தமிழ்நாடு முதலிடம் என்ற கரும்புள்ளி மறையுமா?

இந்தியாவிலேயே சாலை விபத்தில் தமிழ்நாடு முதலிடம் என்ற கரும்புள்ளி மறையுமா?
X

புதுக்கோட்டையில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸார்

புதுக்கோட்டை அபராத தொகை பல மடங்கு உயர்வு சாலை விபத்துகளால் விலை மதிப்பற்ற மனித உயிர்கள் பறிபோய் வருகிறது. உடல் உறுப்புகளை இழந்து பலர் பரிதவிக்கும் நிலையும் ஏற்படுகிறது. இந்த நிலையில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அபராத தொகையை பல மடங்கு அதிகரித்து மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை ரூ.500 முதல் ரூ.1 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் கே.பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார்.

தற்போது மோட்டார் சைக்கிளில் 'ஹெல்மெட்' அணியாமல் சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகை 10 மடங்கு அதிகரித்து ரூ.1,000 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று காரில் 'சீட்' பெல்ட் அணியாமல் சென்றால் ரூ.1,000, செல்போனில் பேசியபடி வாகனத்தை ஓட்டி சென்றால் ரூ.1,000, இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு ரூ.2,000, நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தினால் ரூ.500 என்று அபராத தொகை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

28-ஆம் தேதி முதல் அமல் மதுபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு மட்டும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வரும் வேளையில் பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களுக்கும் அபராதம், ஆம்புலன்சுகளுக்கு வழி விடாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் என புதிய நடைமுறையும் கொண்டு வரப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளை கதிகலங்க வைத்துள்ள இந்த புதிய அபராத நடைமுறை வருகிற 28- ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.

தற்போது புதிய அபராத தொகையை 'இ-சலான்' கருவியில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள அபராதத்தால் வாகன விபத்துகள் குறையுமா? இந்தியாவிலேயே சாலை விபத்தில் தமிழ்நாடு முதலிடம் என்ற கரும்புள்ளி மறையுமா? என்பது வரும் நாள்களில்தான் தெரியவரும்.

இது ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்ந்து பொதுமக்கள் அணிய தொடங்குவார்கள். அதேநேரத்தில் அபராத தொகை கூடுதலாக வசூலிக்கப்படுவதற்கு ஏற்ப சாலை வசதி உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்த வேண்டும். இந்த அபராதம் தொகை உயர்த்தப்பட்டதின் மூலம் அரசுக்கு வருவாய் அதிகம் கிடைக்கும். அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டினால் கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. மற்றவர்களுக்கும் பாதிப்பு தான். அதனால் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதால் ஓரளவு விபத்து கட்டுப்படுத்தப்படும். போக்குவரத்து விதிகளை மீறினால் அபராதம் விதிப்பது வரவேற்க கூடியது தான். இதன்மூலம் சாலை விபத்தில் தமிழ்நாடு முதலிடம் என்ற கரும்புள்ளி மறையும்.

அபராத தொகை செலுத்துவதற்கு பயந்தே போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வாய்ப்பு உண்டு-சமூக ஆர்வலர்கள் அபராத தொகை உயர்த்தினால் தான் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிக்கு கட்டுப்பட்டு செயல்படுவார் கள். மேலும் அபராத தொகை செலுத்த வேண்டும் என்பதற்கு பயந்து எல்லை மீறி செல்வதை தவிர்க்க வாய்ப்பு உண்டு.

போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம்- ஒழுங்கு போலீசார் ஆங்காங்கே அபராத தொகை விதித்தால் பொதுமக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டு விடும். அபராத தொகை செலுத்துவதற்கு பயந்தே போக்குவரத்து விதிமுறை களை கடைபிடிக்க வாய்ப்பு உண்டு.எதற்கெடுத்தாலும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே அதனை பயன்படுத்தவும் மற்ற நேரங்களில் நடந்தே செல்லவும் வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய அபராத விதிப்பு அமலுக்கு வருவது எப்போது? புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகரம், அறந்தாங்கி, ஆலங்குடி, பொன்னமராவதி ஆகிய இடங்களில் போக்குவரத்து காவல் நிலையங்கள் மூலமும், மாவட்டத்தில் உள்ள சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையங்கள் மூலமும் போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், போக்குவரத்து விதி மீறலுக்கான புதிய அபராத தொகை புதுக்கோட்டை மாவட்டத்தில் எப்போது அமலுக்கு வருகிறது என்பது குறித்து மாவட்ட காவல்கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே கூறியதாவது:எங்களுக்கு இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை. உத்தரவு வந்ததும் நடைமுறைப்படுத்தப்படும். போக்குவரத்து விதி மீறலுக்கு அபராத தொகை உயர்வு மட்டும்தான் விபத்துகளை குறைக்கும் என்றார். புதிய அபராதக் கட்டணம் குறித்து புதுக்கோட்டை நகர போக்குவரத்து காவல் நிலைய உதவிஆய்வாளர் மரிய சாத்தோ திலகராஜ் கூறுகையில், மாவட்டத்தில் விபத்துகளை தடுக்கவும், குறைக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் செயல்பட்டு வருகின்றனர்.

சாலைகளில் அதிவேகமாக இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் செல்வதை தடுக்க ஆங்காங்கே இரும்பு தடுப்புகள், வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் விபத்துகளை தடுக்க சிக்னல் விளக்குகள், பிரதி ஒலிப்பான் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து விதி மீறலுக்கான புதிய அபராதம் விதிப்பு தொடர்பாக தற்போது வரை எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை. சென்னையில் 28-ஆம் தேதி முதல் அமல்படுத் தப்பட உள்ளது. எங்களுக்கு உத்தரவு வந்ததும் புதிய முறைப் படி அபராதம் விதிக்கப்படும். அநேகமாக தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு அமலுக்கு வரும் என தெரிகிறது.

எதுவாக இருந்தாலும் உயர் அதிகாரிகளின் உத்தரவு வந்ததும் நாங்கள் செயல்படுவோம். புதிய அபராத தொகை குறித்து ஸ்வைப் மிஷினில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த பதிவேற்றம் முடிந்ததும் அமலுக்கு வரலாம். இதற்கு முன்பு இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய உத்தரவில் ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சென்றால் ரூ.500 அபராதம் இருந்தை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மது போதையில் வாகனம் ஓட்டினால் தற்போது ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் அபராத தொகை ஸ்வைப் மிஷினில் ஏ.டி.எம். கார்டு மூலம் வசூலிக்கப்படும். மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு மட்டும் உடனடி அபராதமாக பணம் வசூலித்து ரசீது வழங்கப்படும்.

சிலர் கையில் பணம் இல்லை என்றால் ஆன்லைன் மூலம் பணம் கட்டுவார்கள். இது தான் தற்போதைய நடைமுறையில் உள்ளது. 18 வயதிற்குட்பட்டவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் அவரது பெற்றோர் தந்தை அல்லது தாய்க்கு சிறை தண்டனை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பல புதிய அறிவிப்புகள் தற்போது வெளியிடப் பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது. அபராத தொகை அதிகரித்ததின் மூலம் பொதுமக்கள் மத்தியில் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும். இதன்மூலம் விபத்துகள் குறைய வாய்ப்பு உள்ளது.புதுக்கோட்டை நகரப்பகுதியில் விபத்துகளை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், குற்றச்சம்பவங்களை தடுக்கவும் 200 இடங்களில் புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்காக தனியாரின் பங்களிப்பு மூலம் ஏற்பாடு நடந்து வருகிறது என்றார்.

Updated On: 23 Oct 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  7. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  8. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு
  10. நாமக்கல்
    வீடு ஒதுக்கீடு பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா வங்கிக் கடன்:...