/* */

புதுகை: இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலராக இணைந்த இளைஞர்கள்

புதுக்கோட்டை மாவட்ட சிஇஓ முன்னிலையில், இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலராக இளைஞர்களை ஆர்வமுடன் இணைந்தனர்.

HIGHLIGHTS

புதுகை: இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலராக இணைந்த இளைஞர்கள்
X

புதுக்கோட்டை மாவட்ட சிஇஓ சாமி சத்தியமூர்த்தி முன்னிலையில்,  இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலராக இணைந்த இளைஞர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியம் புலிவலம் நடுநிலைப் பள்ளியில், இல்லம் தேடிக் கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கலைநிகழ்ச்சியை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார். பின்னர் அப்பகுதியில் உள்ள 5 தன்னார்வலர்கள் தங்களை முதன்மை கல்வி அலுவலர் முன்னிலையில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் இணைத்துக் கொண்டனர். இல்லம் தேடிக்கல்வி கலைக்குழுவின் விழிப்புணர்வு நிகழ்வில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

புலிவலம் ஊராட்சி மன்றத்தலைவர் கருப்பாயி,திருமயம் வட்டாரக் கல்வி அலுவலர் ராமதிலகம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் குல்ஜார் பானு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வீரப்பன், சரவணன், ஆசிரிய பயிற்றுநர்கள் அன்பழகன், பரிசுத்தம், பள்ளித்தலைமை ஆசிரியை சாந்தசீலா மற்றும் அப்பள்ளி ஆசிரியர்கள்,பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருமயம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியினை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பார்வையிட்டு மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் காட்டுபாவா பள்ளிவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியினை பார்வையிட்டு அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் மாணவர்கள் கற்றல் மேற்கொள்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

Updated On: 3 Dec 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்