/* */

தடுப்பூசி:நத்தம்பண்ணை ஊராட்சியில் வீடுகளுக்கே சென்று மக்கள் அழைத்து வந்தனர்

தடுப்பூசி:நத்தம்பண்ணை ஊராட்சியில்  வீடுகளுக்கே சென்று மக்கள் அழைத்து வந்தனர்
X

9A நத்தம்பண்ணை ஊராட்சியில் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஊராட்சி மன்றத் தலைவர் ஏ வி எம் பாபு தலைமையில் அலுவலர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முகாமுக்கு அழைத்து வந்தனர்.

9A நத்தம்பண்ணை ஊராட்சியில் வீடுகளுக்கே தேடிச் சென்று பொதுமக்களை தடுப்பூசி போட அழைத்து வந்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும்தான் தடுப்பூசியைப் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அதிக அளவில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக அரசு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாமை நடத்தி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று 734 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வந்தது இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடுப்பூசி சேர்த்துக்கொள்ளும் பொதுமக்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்க நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து இன்று நடைபெற்ற தடுப்பு முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டனர்

அதுமட்டுமல்லாமல் புதுக்கோட்டை 9A நத்தம்பண்ணை ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் ஏவிஎம் பாபு ஏற்பாட்டின் பேரில் தடுப்பூசியின் செலுத்திக் கொள்ளாமல் வீடுகளில் இருக்கும் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை வீடுகளுக்கே சென்று நூறு நாள் வேலை செய்யும் பணியாளர்கள் கொண்டு, வீடுகளில் தடுப்பூசி போடாமல் இருக்கும் பொது மக்களை அழைத்து வந்து தடுப்பூசி போட வைத்து, மீண்டும் வீடுகளுக்குக் கொண்டு போய் விடுவதற்குமான ஏற்பாட்டை ஊராட்சி நிர்வாகம் செய்திருந்தது. இதனால் பொதுமக்கள் அதிகளவில் தடுப்பூசி போட்டுக் கொண்டு பயனடைந்தனர்.

ஒவ்வொரு ஊராட்சியிலும் பல்வேறு விதமான ஏற்பாடுகளை செய்து இருந்தாலும் 9A நத்தம்பண்ணை ஊராட்சியில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் வீடுகள் இருந்த பொதுமக்களை வீடுகளுக்கு சென்று அழைத்து வந்து தடுப்பூசி போட்ட பிறகு மீண்டும் வீடுகளுக்கு அழைத்துச் சென்றது.பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Updated On: 10 Oct 2021 1:18 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  2. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  3. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  4. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  5. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு