/* */

டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பாக மழைக்கால மருத்துவ முகாம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு மழைக்கால மருத்துவ முகாம் ஆட்டாங்குடியில் நடைபெற்றது

HIGHLIGHTS

டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பாக மழைக்கால மருத்துவ முகாம்
X

டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பாக தமிழ்நாடு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மழைக்கால மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது இதில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாகி இயக்குனர்களின முதியவர்களுக்கு பரிசோதனை செய்கிறார்

புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பாக மழைக்கால மருத்துவ முகாம் நடைபெற்றது

புதுக்கோட்டை டீம் மருத்துவமனை சார்பாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு மழைக்கால மருத்துவ முகாம், கவிநாடு கிழக்கு ஊராட்சி, ஆட்டாங்குடி சமுதாயக் கூடத்தில் கொரனோ கால சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக நடைபெற்றது.

இந்த முகாமிற்கு சிறப்பு விருந்தினராக ஊராட்சி மன்றத் தலைவி ரெங்கம்மாள் பழனிச்சாமி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தி, ஒன்றியச் செயலாளர் வெற்றிச்செல்வன், வார்டு உறுப்பினர் சதீஸ், கிராம நிர்வாக அலுவலர் சதீஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

முகாமில் டீம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் சலீம் பங்கேற்று , மழைக்காலத்தில் மக்களுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களைப் பற்றியும், அவற்றிலிருந்து பாதுகாப்பது குறித்தும், முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் விளக்கி பேசினார்.

இம்முகாமில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, இரத்தத்தில் சர்க்கரை அளவு போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அவர்களுக்கு டீம் மருத்துவமனையின் சர்க்கரைநோய் சிறப்பு மருத்துவர்.சலீம் மற்றும் இருக்கை மருத்துவர் முபாரக் மருத்துவ ஆலோசனை வழங்கினர். இதில் காப்பீடு திட்ட அலுவலர் சக்திவேல் கலந்து கொண்டார். முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் டீம் மருத்துவமனையின் மேலாளர் ஜோசப் நன்றி கூறினார். ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் கௌசல்யா செய்திருந்தார்.




Updated On: 20 Nov 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  3. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  4. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  6. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  10. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?