/* */

ஆயுத பூஜை நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பூ சந்தையில் குவிந்த பொதுமக்கள்

ஆயுத பூஜை நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பூ சந்தையில் பூக்கள் வாங்க குவிந்த மக்கள்.

HIGHLIGHTS

ஆயுத பூஜை நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பூ சந்தையில் குவிந்த பொதுமக்கள்
X

ஆயுத பூஜை நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பூ சந்தையில் குவிந்த பொதுமக்கள்

பூ வரத்து அதிகமாக உள்ளதால் சம்மங்கி செவ்வந்திப்பூ கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்களின் விலை வீழ்ச்சி, மல்லிகை முல்லை ரோஜா ஆகிய மலர்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி கொத்தமங்கலம் கீரமங்கலம் கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மலர் சாகுபடி அதிக அளவு செய்யப்பட்டு வருகிறது குறிப்பாக கோழிக்கொண்டை சம்பங்கி செவ்வந்திப்பூ கனகாம்பரம் அரலி மல்லிகை முல்லை உள்ளிட்ட மலர்கள் பெருமளவு சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது மழை நன்கு பெய்துள்ளதால் பூக்களின் விளைச்சல் அதிக அளவு உள்ளது

புதுக்கோட்டை மாவட்டத்தில் விளைவிக்கக்கூடிய மலர்கள் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பூ சந்தையில் ஏலம் விடப்படும். விவசாயிகள் தாங்கள் விளைவித்த மலர்களை கொண்டு வந்து ஏலம் விடுவார்கள் ஏலத்தில் புதுக்கோட்டை மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களான தஞ்சை சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பூ வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மலர்களை ஏலம் எடுப்பார்கள்.

இந்நிலையில் நவராத்திரி விழாவின் முக்கிய நாளான ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகியவை நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்க உள்ளது. இதையடுத்து புதுக்கோட்டை பூ சந்தையில் பூக்களின் வரத்து அதிகமாக உள்ளது இதேபோன்று பொதுமக்களும் வியாபாரிகளும் அதிக அளவு ஏலத்தில் பங்கேற்று தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி செல்கின்றனர்.

பூ சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும் பூக்களின் விளைச்சல் அதிகமாகி வரத்து அதிகமாக உள்ளதால் பூக்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது செவ்வந்தி பூ கிலோ 250 ரூபாய் சம்பங்கி பூ 250 ரூபாய் கோழிக்கொண்டை 30 ரூபாய் கேந்தி பூ 200 ரூபாய் என விலை வீழ்ச்சி அடைந்துள்ளது

இருப்பினும் அரளி பூ கிலோ 500 ரூபாய் மல்லிகை கிலோ ஆயிரம் ரூபாய்முல்லைப்பூ 900 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

மல்லி முல்லை ரோஜா ஆகிய பூக்களின் விலை மட்டும் அதிக அளவு உள்ளது மீதமுள்ள பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Updated On: 13 Oct 2021 4:14 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  3. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  5. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  6. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  7. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  8. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது