/* */

அனைவருக்கும் வீடு திட்ட பயனாளிகளுக்கு வீடுகட்டுவதற்கான செயல்முறை கையேடு வெளியீடு

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகட்டுவதற்கான செயல்முறைகையேடுகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்டார்

HIGHLIGHTS

அனைவருக்கும் வீடு திட்ட பயனாளிகளுக்கு வீடுகட்டுவதற்கான செயல்முறை கையேடு வெளியீடு
X

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகட்டுவதற்கான செயல்முறை குறித்த கையேடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகட்டுவதற்கான செயல்முறை குறித்த கையேடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கவிநாடு கிழக்கு ஊராட்சியை சேர்ந்த பயனாளிக ளுக்கு வீடுகட்டுவதற்கான செயல்முறை குறித்த கையேடுகளை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு (14.07.2022) வழங்கினார்.

ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 269 சதுரடி பரப்பளவில் உறிஞ்சி குழியுடன் கூடிய கழிவறைகளுடன் மாநில அரசு ரூ.1,72,800 மற்றும் ஒன்றிய அரசு ரூ.1,04,490 என மொத்தமாக ரூ.2,77,290 மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இக்கட்டுமான பணிகளை அரசு தெரிவித்துள்ள அளவுகளின் கீழ் மேற்கொள்ளவும், அரசு வழங்கும் மானியத் தொகை குறித்த விபரங்களும், வீடுகட்ட தேவைப்படும் கட்டுமானப் பொருட்கள், கட்டுமான தொழிலாளர்கள், தனிநபர் இல்லக் கழிவறை குறித்த விவரங்கள், கழிப்பறையின் பயன்பாடு, உறிஞ்சிக்குழி கட்டுமான வகைகள், கள அலுவலர்களின் ஆய்வு குறித்த விவரங்கள் மற்றும் பணிகளை தள ஆய்வு மேற்கொண்டு ஒவ்வொரு படிநிலை மற்றும் பணி முடிந்த பின்பு வழங்கப்படும் பட்டியல்கள் குறித்த விவரங்கள் அடங்கிய கையேடு பயனாளிகளுக்கு ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலமாக பயனாளிகளுக்கு வீடு கட்டுவது குறித்த சந்தேகங்களை தெரிந்து கொள்வதற்கும், மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 8925422215 மற்றும் 8925422216 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறும் வகையில் இக்கையேடு வடிமைக்கப்பட்டுள்ளது. எனவே பணியாளிகள் அனைவரும் இக்கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களை பின்பற்றி சிறப்பான முறையில் வீடுகளை அமைத்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்திடும் வகையில் 'மீண்டும் மஞ்சள் பை" திட்டத்தின் கீழ் அலுவலர்கள் மற்றும் பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மஞ்சள் பைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமாரவேலன், நாகராஜன், கவிநாடு கிழக்கு ஊராட்சி மன்றத் தலைவர் செங்கமாள் பழனிச்சாமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Updated On: 14 July 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  5. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  7. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  9. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  10. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!