/* */

பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற இளையோருக்கு அமைச்சர் வாழ்த்து

நேரு யுவ கேந்திரா சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற இளையோருக்கு அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து தெரிவித்தார்

HIGHLIGHTS

பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற இளையோருக்கு அமைச்சர் வாழ்த்து
X

நேரு யுவ கேந்திரா சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற இளையோருக்கு அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து தெரிவித்தார்

இந்திய அரசு புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இப்பயிற்சி அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை படை மூலமாக 6 நாட்கள் அளிக்கப்படுகிறது. இதில் நமது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த 390 இளையோர் பல்வேறு குழுக்களாக இப் பயிற்சியில் பங்கேற்கின்றனர். இதில் இரண்டாம் குழுவில் சென்று பயிற்சி பெற்று ஊர் திரும்பிய இளையோர் தமிழக அரசின் இளைஞர் நலம் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனை ரோஜா இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

அப்போது அமைச்சர் நம் இளம் தலைமுறையினர் பல்வேறு திறன் மிக்கவர்களாகவும், சாதனை நிகழ்த்துபவர்களாகவும் தங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்றும். அதற்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று கூறி வாழ்த்தினார். இந்நிகழ்வில் நைனா முகமது, எம்.எம்.பாலு, நேரு யுவ கேந்திரா திட்ட உதவி அலுவலர் நமச்சிவாயம், புதுக்கோட்டை மாவட்ட குத்துச்சண்டைக் கழக தலைவர் எஸ்விஎஸ். ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வினை புத்தாஸ் வீரக் கலைகள் கழக நிறுவனர் சேது. கார்த்திகேயன் ஒருங்கிணைத்தார்.

தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்... இந்தியாவில் ஏற்படக் கூடிய இயற்கைப் பேரழிவுகள் முதல், உயிரியல், ரசாயன, அணுக் கதிரியக்கம் முதலான எல்லா வகைப் பேரழிவுகளையும் சமாளிக்கும் வழிமுறைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உருவாக்கபட்ட ஆணையமாகும்.

இந்திய அரசாங்கம் பேரிடர் மேலாண்மையை தேசிய முன்னுரிமையாக அங்கீகரித்து ஆகஸ்ட் 1999ல் ஓர் உயர் ஆற்றல்மிக்க குழுவை (High-Powered Committee) அமைத்தது. 2001 குஜராத் பூகம்பத்திற்கு பிறகு பேரிடர் மேலாண்மை திட்டமிடல் குறித்தும் தடுப்பு வழிமுறைகள் குறித்தும் பரிந்துரைகளை செய்ய ஒரு தேசிய குழு அமைக்கப்பட்டது. பத்தாவது ஐந்தாண்டு திட்ட ஆவணத்திலும், முதல் முறையாக, பேரிடர் மேலாண்மை தொடர்பாக ஒரு விரிவான அத்தியாயம் இருந்தது. இதேபோல், பன்னிரண்டாவது நிதி ஆணையம் பேரிடர் மேலாண்மையின் நிதி ஏற்பாடுகளை ஆய்வு செய்ய உரிமைக் கட்டளை இடப்பட்டது. 23 டிசம்பர் 2005 அன்று, இந்திய அரசு, பேரிடர் மேலாண்மை சட்டம் இயற்றியது. இதன் அடிப்படையில், பிரதமர் தலைமையில் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.

தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையதின் கீழ் தேசியப் பேரழிவு மீட்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. உடனடி மீட்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் 10 பட்டாலியன் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இப்படையில் பயிற்சி பெற்ற வீரர்கள் மொத்தம் 10,400 பேர் உள்ளனர். அதில் ஒரு பட்டாலியன் தமிழகத்தில் அரக்கோணத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், காசியாபாத் (உத்தரப்பிரதேசம்), பட்டியாலா(பஞ்சாப்), கொல்கத்தா (மேற்கு வங்காளம்), குவஹாத்தி(அசாம்), கட்டாக்(ஒடிசா), அரக்கோணம்(தமிழ்நாடு), புனே(மகாராஷ்டிரம்) காந்திநகர் (குஜராத்), பட்னா(பீகார்) குண்டூர் (ஆந்திரப் பிரதேசம்) ஆகிய இடங்களில் உள்ளன.


Updated On: 4 Dec 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. தொழில்நுட்பம்
    Realme C65 5G புதிய பட்ஜெட் போன்... சக்தி அதிகமா?
  9. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  10. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்