/* */

நகராட்சி 25 வது வார்டு திமுக வேட்பாளருக்கு ஆதரவாக எம்எல்ஏ நூதன பிரசாரம்

திமுக வேட்பாளர் திலகவதி செந்தில்குமாருக்கு ஆதரவாக திமுக எம்எல்ஏ டாக்டர் வை. முத்துராஜா நிலக்கடலை வறுத்து வாக்கு சேகரித்தார்

HIGHLIGHTS

நகராட்சி 25 வது வார்டு திமுக வேட்பாளருக்கு ஆதரவாக எம்எல்ஏ நூதன பிரசாரம்
X

புதுக்கோட்டை நகராட்சி தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர் திவகவதி செந்தில்குமாருக்கு நூதன முறையில் வாக்கு சேகரித்த எம்எல்ஏ டாக்டர் வை. முத்துராஜா.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 25 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் திலகவதி செந்தில்குமாருக்கு ஆதரவாக திமுக எம்எல்ஏ டாக்டர் வை. முத்துராஜா நிலக்கடலை வறுத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து நூதன முறையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள்காண நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு நாளை கடைசி நாள் என்பதால் திங்கள்கிழமை மாலை வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியாக உள்ளது.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 25 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திலகவதி செந்தில்குமாருக்கு ஆதரவாக புதுக்கோட்டை திமுக எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளருடன் வீடு வீடாக சென்றும் மற்றும் நிலக்கடலை வறுத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்தும் உதயசூரியன் சின்னத்திற்கு நூதன முறையில் வாக்குகள் சேகரித்தார்.

Updated On: 6 Feb 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  5. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  7. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  8. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  9. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  10. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...