ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: மாவட்ட நிர்வாகிகளுடன் சீமான் கலந்தாய்வு

தேர்தலில் வாக்குகள் விழாது என்பதால் பா.ஜ.க.வை கழட்டி விட அ.தி.மு.க. தயாராகி நிற்கிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: மாவட்ட நிர்வாகிகளுடன் சீமான் கலந்தாய்வு
X

சீமான் (பைல் படம்)

புதுக்கோட்டை பெருமாநாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புதுக்கோட்டை, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, ஈரோடு இடைத்தேர்தல் களம் எனக்கானது, இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி. தேர்தல் ஆணையம் உள்ளதா என்பதை யாராவது கூற வேண்டும். தி.மு.க.வின் எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது.இது எங்களுக்கு சாதகமாக இருக்கும்.

ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் அதிகார பலம், பண பலத்தை தி.மு.க. காட்ட தொடங்கிவிட்டது. இடைத்தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்று கூறி வேட்பாளரை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது, துணிச்சலான முடிவு வாழ்த்துகள். தேர்தலில் வெற்றி பெறுவது அரவிந்த் கெஜ்ரிவாலால் முடியும், சீமானால் முடியாதா? கமல்ஹாசன் கட்சி தொடங்கும் போது தனித்து தான் போட்டி என்று கூறினார். தற்போது அவர் காங்கிரஸ் பக்கம் சாய்வதாக தெரிகிறது.

அதுபோன்று வரும் காலத்தில் நாங்கள் கூட்டணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை.. ஆனால் தேர்தலில் வாக்குகள் விழாது என்பதால் பா.ஜ.க.வை கழட்டி விட அ.தி.மு.க. தயாராகி நிற்கிறது. ஈரோடு இடைத்தேர்தலில் எனக்கு யாரும் போட்டி கிடையாது. எத்தனை பேர் களமிறங்கினாலும் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறுவது உறுதி. நான் தனித்து போட்டியிடுவேன் என்று ஒவ்வொரு தேர்தலிலும் கூறி தனித்து போட்டிட்டு வருகிறேன்.

இது போன்று பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தனித்து போட்டியிடும் என்று கூற முடியுமா? நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வருகிற 29-ந் தேதி ஈரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளார். 2024 ஆம் ஆண்டு நடக்கும் பாராளுமன்றத் தேர்தலில் என்னுடைய ஆட்டத்தை பாருங்கள். தற்போது தமிழகத்தில் சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன. இவர்கள் யாரும் தே.மு.தி.க. பக்கம் செல்லப்போவது கிடையாது. மாற்றம் தமிழகத்தில் ஏற்படும் என்று நான் நம்பவில்லை என்றார் சீமான்..

Updated On: 25 Jan 2023 1:15 PM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  ஆதிதிராவிடர்களுக்கான மேம்பாட்டு பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற முதல்வர்...
 2. சினிமா
  ரிவியூ சொன்ன குழந்தை...கூலாக பதிலளித்த ஷாருக்கான்
 3. உலகம்
  அடுத்த ஆண்டு இந்தியா வர போப் பிரான்சிஸ் திட்டம்
 4. சினிமா
  நீலம் புரொடக்சன் தயாரிப்பில் புதிய படம் அறிவிப்பு
 5. இந்தியா
  பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரத்தை தொடங்கி வைத்த பிரதமர்
 6. சினிமா
  300 கோடி ரூபாய் வசூலை அள்ளிய வாரிசு: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 7. தமிழ்நாடு
  அதிமுக வேட்பாளருக்கான 'ஏ' , 'பி' படிவங்களில் கையெழுத்திட...
 8. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் நாளை மறுநாள் விசைத்தறி தொழிலாளர்கள் 2ம் கட்ட...
 9. தமிழ்நாடு
  நிமிர்ந்தார் எடப்பாடி- குனிந்தார் பன்னீர்- 'கை'க்கு போட்டி இரட்டை இலை
 10. டாக்டர் சார்
  சைவ உணவுகளில் நமக்கு போதுமான சத்துகள் கிடைக்கிறதா?.....படிச்சு...