/* */

பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறிவது குறித்து வட்டார வளமையத்தில் ஆலோசனை

பள்ளி செல்லா குழந்தைகளை நேரடியாக குடியிருப்புக்கே சென்று ஆய்வு செய்யும் பணியானது நாளை(டிச.19) தொடங்குகிறது

HIGHLIGHTS

பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறிவது குறித்து வட்டார வளமையத்தில் ஆலோசனை
X

 பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் வட்டாரக் கல்வி அலுவலர் நரசிம்மன் தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறிவது குறித்து வட்டார வளமையத்தில் ஆலோசனை கூட்டம்.

கந்தர்வகோட்டை ஒன்றிய வட்டார வள மையத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் வட்டாரக் கல்வி அலுவலர் நரசிம்மன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார்.

பள்ளி செல்லா குழந்தைகளை நேரடியாக குடியிருப்புக்கே சென்று ஆய்வு செய்யும் பணியானது. வருகின்ற 19 /12/ 2022 முதல் 11/1/2023 முடிய நடைபெற இருக்கிறது. இதில் நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத குழந்தைகளை முற்றிலுமாக நேரடியாக கள ஆய்வு செய்து அவர்களுடைய தற்போதைய நிலை குறித்து TNSED ADMINSTRATION செயலியில் எவ்வாறு பதிவேற்றம் செய்வது என்பது தொடர்பாக கூட்டத்தில் பேசப்பட்டு, அனைவருக்கும் செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.

மேலும் பள்ளி செல்லா இடை நின்ற மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்களை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும். சிறப்பு பயிற்சி தேவைப்படும். மாணவ, மாணவிகளை இணைப்பு சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டவுடன் அவர்களின் விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள் சங்கிலிமுத்து, சுரேஷ்குமார், இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப் பாளர் அ‌.ரகமதுல்லா, சிறப்பாசிரியர்கள் அறிவழகன், ரம்யா, ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன் நன்றி கூறினார்.

Updated On: 18 Dec 2022 4:35 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!