/* */

கட்டிடத் தொழிலாளர்களை இனிமேல் கட்டிட க்கலைஞர்கள் என அழைக்கவேண்டும்: எம்எல்ஏ பேச்சு

மற்ற நிறுவன சிமெண்ட் விலை குறைய காரணம் தமிழக அரசின் வலிமை சிமெண்ட் தான் என்றார் எம்எல்ஏ

HIGHLIGHTS

கட்டிடத் தொழிலாளர்களை இனிமேல் கட்டிட க்கலைஞர்கள் என அழைக்கவேண்டும்: எம்எல்ஏ பேச்சு
X

புதுக்கோட்டை கட்டிட பொறியாளர் சங்கத்தின் சார்பில் தமிழக அரசின் வலிமை சிமெண்ட் அறிமுகப்படுத்திய புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா

கட்டிட தொழிலாளர்களை இனிமேல் கட்டிட கலைஞர்கள் என அழைக்கவேண்டும் என்றார் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா.

புதுக்கோட்டை கட்டிட பொறியாளர் சங்கத்தின் முப்பெரும் விழா நிஜாம் சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் இன்று நடைபெற்றது. இந்த முப்பெரும் விழாவில் தமிழக அரசின் வலிமை சிமெண்ட் அறிமுக விழா 2022 ஆண்டு நாட்குறிப்பு கையேடு வெளியீட்டு விழா மற்றும் கட்டிட பொறியாளர் சங்கத்தின் பொதுக்குழு என முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ராய முத்துக்குமார் மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்து ராஜா ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

விழாவில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா பேசியதாவது:

கட்டிட தொழிலாளர்கள் என இனிமேல் அவர்களை அழைக்கக்கூடாது கட்டிட கலைஞர்கள் என கட்டிட தொழிலாளர்களை அழைக்கவேண்டும் பல்வேறு வடிவங்களில் கட்டிடங்களை அழகாக அவர்கள்தான் கட்டுகின்றனர். எனவே அவர்களை கட்டிட கலைஞர்கள் என அழைத்தால், அது அவர்களுக்கே கௌரவமாக இருக்கும்.மற்ற தனியார் கம்பெனி சிமெண்ட்கள் எல்லாம் அதிக விலைக்கு விற்பனை செய்யும் பொழுது தமிழக அரசு அறிவித்துள்ள வலிமை சிமெண்ட் 350 ரூபாய்க்கு விற்பனை செய்வதால், அந்த சிமெண்ட் தரம் எவ்வாறு இருக்கும் என சந்தேகம் வரலாம் .

ஆனால் தமிழக அரசு எந்த அளவுக்கு வலிமையாக செயல்படுகிறதோ அந்த அளவுக்கு இந்த வலிமை சிமெண்ட் இருக்கும் அந்த உத்தரவாதத்தை நீங்கள் மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். மேலும் மற்ற நிறுவன சிமெண்ட் விலைகள் குறைய காரணம்தமிழக அரசின் வலிமை சிமெண்ட் தான் என்றார் எம்எல்ஏ முத்துராஜா. இந்த நிகழ்வில் புதுக்கோட்டை கட்டிட பொறியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் கட்டிட பொறியாளர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

Updated On: 28 Dec 2021 4:03 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  2. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  4. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  5. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  10. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?