/* */

முன்னாள் எம்பி வசந்தகுமார் நினைவு நாள்: காங்கிரஸ் நிர்வாகிகள் அஞ்சலி

புதுக்கோட்டை வசந்த் அன்கோ நிறுவனத்தில் வசந்தகுமாரின் உருவப்படத்துக்கு காங்கிரஸார் மலர் தூவி மரியாதை செய்தனர்

HIGHLIGHTS

முன்னாள் எம்பி வசந்தகுமார் நினைவு நாள்:   காங்கிரஸ் நிர்வாகிகள் அஞ்சலி
X

புதுக்கோட்டை காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த்  குமார் முதலாம் ஆண்டு நினைவு   தினத்தை முன்னிட்டு அவருடைய   படத்திற்கு மலர் தூவி மரியாதை    செய்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்

முன்னாள் எம்பி வசந்தகுமாரின் நினைவு நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் அவரது உருவப்படத்துக்குகாங்கிரஸ் நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வசந்தகுமார், கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலகட்டத்தில் தொகுதி மக்களிடம் நேரடியாகச் சென்று, களப்பணியாறறி பல்வேறு உதவிகளை செய்து வந்தார். அப்படி இருந்த நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சென்ற ஆண்டு இதே நாளில் உயிரிழந்தார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று புதுக்கோட்டை பிருந்தாவனம் அருகே உள்ள வசந்த் அன்கோ நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்வில், வசந்தகுமாரின் உருவப்படத்திற்கு புதுக்கோட்டை காங்கிரஸ் கட்சி சார்பில் மலர் தூவி மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்வில், காங்கிரஸ் நகர தலைவர் இப்ராஹிம் பாபு, சந்திரசேகரன், சிவா உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வசந்தகுமாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.


Updated On: 28 Aug 2021 9:08 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  4. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  5. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
  9. தேனி
    கொதிக்குது தேனி தண்ணீயாவது குடுங்க... இந்து எழுச்சி முன்னணி...
  10. ஆரணி
    ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள்...