/* */

புதுக்கோட்டையில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல்: எம்எல்ஏ உட்பட 500 பேர் கைது

மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் ஈடுபட்ட எம்எல்ஏ சின்னத்திரை உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல்: எம்எல்ஏ உட்பட 500 பேர் கைது
X

புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு  மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் ஈடுபட்ட   எம்எல்ஏ சின்னத்திரை உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது.

மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் ஈடுபட்ட எம்எல்ஏ சின்னத்திரை உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது.

அகில இந்திய அளவில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசை கண்டித்து தொடர்ந்து பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து இன்றும், நாளையும் அகில இந்திய அளவில் பொது வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.

தமிழ் நாட்டில் இன்று நடைபெற்ற பொது வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து பகுதிகளிலும் சாலைமறியல் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பொது வேலை நிறுத்தத்தினால் தமிழகம் முழுவதும் குறைவாகவே பேருந்துகள் ஓடுவதால் பொதுமக்கள் மற்றும் கல்லூரி பள்ளி மாணவ மாணவிகள் பெரும் அவதிப்பட்டு வந்தாலும் அத்தியாவசியப் பொருளான பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அனைத்து சங்கங்களின் சார்பிலும் ஆதரவு இருப்பதால் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்திலும் பொது வேலை நிறுத்தம் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் ஏஐடியுசி எல்பிஎப், சிஐடியூ, ஏஐடியுசி உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்கம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று தலைமை தபால் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ சின்னத்துரை உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொழுது 108 ஆம்புலன்ஸ் வாகனம் வந்ததால் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விட்டு வாகனத்தை அனுப்பி வைத்த பின்பு மீண்டும் சாலைமறியல் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Updated On: 28 March 2022 6:49 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  2. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  3. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  4. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  6. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  8. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  9. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  10. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...