/* */

தொடர் செயின்பறிப்பு, 2 பேர் கைது- 52 சவரன் நகைகள் மீட்பு

புதுக்கோட்டை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் 52 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனியே சென்ற இரு பெண்மணிகளிடம் மோட்டார்பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர் அவர்கள் அணிந்திருந்த நகைகளை பறித்து விட்டு அங்கிருந்து தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து கடியாப்பட்டியில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்க புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தனிப்படை அமைத்தார்.

கடந்த 10 நாட்களாக தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் அறந்தாங்கி அருகே உள்ள திருநாளுர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். அந்த இரண்டு பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருநாளூர் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் (19), விஷ்ணு(22) என்பதும் அவர்கள் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் தொடர்ந்து பெண்களிடம் மோட்டார்பைக்கில் சென்று செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அந்த இரண்டு பேரையும் திருமயம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் அவர்களிடமிருந்த சுமார் 52 சவரன் தங்க நகைகளை மீட்டதோடு செயின் பறிப்புக்கு பயன்படுத்திய ஒரு மோட்டார்பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 10 March 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  9. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...