Begin typing your search above and press return to search.
பெரம்பலூர் அருகே தீயில் வீட்டை இழந்தவருக்கு நிவாரணம் வழங்கிய அதிமுக
பெரம்பலூர் அருகே தீயில் வீட்டை இழந்தவருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை அதிமுக மாவட்ட செயலாளர் வழங்கினார்.
HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே தீ விபத்தில் வீட்டை இழந்தவருக்கு அதிமுக மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் நிவாரணம் வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள கொட்டரை கிராமத்தில் தங்கவேல் பார்வதி என்ற தம்பதியினருக்கு சொந்தமான வீடு நேற்று மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடந்தது.
தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் ஆறுதல் கூறியதோடு ரூ.25000 நிதியும் ஒரு சிப்பம் அரிசி மற்றும் உடைகளை நிவாரணமாக வழங்கினார். இந்நிகழ்வில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணன் உடனிருந்தார்.