/* */

உடல் நலம் பாதித்தவரை அரவணைத்த - அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லம்

சாலையோரங்களில் படுத்துறங்கியவரை அரவணைத்து, அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லம் அடைக்கலம் கொடுத்தது.

HIGHLIGHTS

உடல் நலம் பாதித்தவரை அரவணைத்த - அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லம்
X

உதகையில் நோய்வாய்ப்பட்டவரை குடும்பம் ஒதுக்கிய நிலையில் கரம் நீட்டி அரவணைத்த அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லம், ஓர் நெகிழ்ச்சி சம்பவம்.

உதகை ஊராட்சிக்குட்பட்ட நஞ்சநாடு பகுதியில் கூலித் தொழிலாளியாக பணிபுரிபவர் திடீரென உடல்நலக் குறைவால் பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குடும்பத்தினர் மருத்துவமனையில் அவரை கண்டதும் வீட்டிற்கு வரக் கூடாது எனவும் தங்களை பார்க்க வரவேண்டாம் எனவும் கூறி மருத்துவமனையிலேயே விட்டுச் சென்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட உடல்நலம் பாதித்தவர். சாலையோரங்களில் படுத்துறங்கியதை கண்ட அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லத்தினர் அவரை அழைத்துக் கொண்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று அவரை சுத்தப்படுத்தி சிகை அலங்காரம் செய்து உணவு வழங்கி அடைக்கலம் கொடுத்தனர். உடல் நலம் பாதித்தவர் குடும்பத்தால் ஒதுக்கப்பட்ட பின் அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லத்தால் அரவணைத்த இச்சம்பவம் உதகை நகரில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இங்கு குடும்பத்தால் ஒதுக்கப்பட்டோரும் நகரில் மனநலம் பாதித்து சுற்றி திரிவோர் என 100 க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து அடைக்கலம் கொடுத்துள்ள அப்துல் கலாம் ஆதவற்றோர் இல்லத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 1 Feb 2021 3:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....