/* */

தடுப்பு சுவர் கட்டும் பணியின் போது மண்சரிவு: உயிர் தப்பிய தொழிலாளர்கள்

பணி நடைபெற்ற இடத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது

HIGHLIGHTS

தடுப்பு சுவர் கட்டும் பணியின் போது மண்சரிவு:  உயிர் தப்பிய தொழிலாளர்கள்
X

தடுப்பு சுவர் கட்டும் பணியின்போது சரிந்த மண்

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே பரவலாக மழை பெய்து வருகிறது.

அவ்வப்போது மிதமானது முதல், கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது. மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுவது, மண்சரிவுகளும் ஏற்பட்டு வருகிறது. சாலையில் விழும் மரங்களால் போக்குவரத்தும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள் பகுதிகளில் நேற்று காலை முதலே மிதமான மழை பெய்தது. மதியத்திற்கு பிறகு கனமழை கொட்டி தீர்த்தது.

மழையால் குன்னூர் வண்ணாரப்பேட்டை, கோத்தகிரி சாலை, ஊட்டி சாலை, பேருந்து நிலைய பகுதி, மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீரும் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் மிகவும் அவதியடைந்தனர்.

குன்னூர் சந்திரா காலனியில் நடைபாதையை ஒட்டி தடுப்பு சுவர் கட்டும் பணி நடந்தது. இந்த பணியில் தொழிலாளர்கள் அதிகமானோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது மழை பெய்தததால் தொழிலாளர்கள் பணியை நிறுத்தி விட்டு, அருகே உள்ள கட்டிடத்தில் சென்று ஒதுங்கி நின்றனர்.

அந்த சமயம் பெய்த மழைக்கு, பணி நடைபெற்ற இடத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. மண்சரிவு ஏற்பட்டு அருகே உள்ள வீடுகள் மீது விழுந்ததில், வீடுகள் சேதம் அடைந்தன. ஆனால் வீட்டில் ஆட்கள் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.

குன்னூர் பகுதியில் பல இடங்களிலும் மின் கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் அவை எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலை காணப்படுகிறது.

எனவே அந்த மின்கம்பங்களை மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று, தற்போது மின்வாரிய ஊழியர்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர் மழை காரணமாக நிலத்தில் ஈரத்தன்மை அதிகரித்து வருவதால் மலை சரிவில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வருவாய்த் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. காலையில் தொடங்கி இரவு முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது. அவ்வப்போது பெரிய மழையாகவும், பெரும்பாலான நேரங்களில் தூறி கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டது. தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மழையுடன் குளிரும் வாட்டி வதைப்பதால் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

குளிரில் இருந்து தப்பிக்க வீடுகளில் தீமூட்டி குளிர்காய்ந்து வருகிறார்கள். இதுதவிர பகல் நேரங்களில் கடும் மேகமூட்டமும் நிலவுகிறது. இதனால் சாலைகள் எதுவும் தெரிவதில்லை. வாகன ஓட்டிகள், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனத்தை இயக்கி செல்கிறார்கள்.

Updated On: 8 Dec 2023 1:51 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  2. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  3. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  4. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  7. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  8. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  9. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  10. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை