வேதாரண்யம்-அம்மா உணவகத்தில் பணியாற்றும் பெண் பணியாளர்கள் தற்கொலை முயற்சி

வேதாரண்யத்தில் அம்மா உணவகத்தில் பணியாற்றும் மூன்று பெண் பணியாளர்கள் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வேதாரண்யம்-அம்மா உணவகத்தில் பணியாற்றும் பெண் பணியாளர்கள் தற்கொலை முயற்சி
X

வேதாரண்யத்தில் அம்மா உணவகத்தில் பணியாற்றும் மூன்று பெண் பணியாளர்கள் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள அம்மா உணவகம் கடந்த ஆறு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.இந்த உணவகத்தில் 18 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் வேதாரண்யம் அம்மா உணவகத்தில் பணியாற்றும் அதிமுகவைச் சேர்ந்த வெற்றிச்செல்வி, தமிழ்ச்செல்வி, கமலா ஆகிய மூன்று பெண் ஊழியர்களை நகராட்சி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.

திமுகவினர் தூண்டுதலால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறி அம்மா உணவகத்தில் மீண்டும் தங்களை பணியில் சேர்த்து கொள்ளாவிடில் மூன்று பேரும் தீக்குளிக்க போவதாக கூறி மண்ணெண்னை கேனுடன் அம்மா உணவகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து தங்களுக்கு பணி வழங்கும் வரை போராட்டம் தொடரும் என அம்மா உணவக ஊழியர்கள் தெரிவித்தனர்.

Updated On: 2021-05-27T13:33:48+05:30

Related News