/* */

சேந்தமங்கலம் அருகே மலைக்குன்றில் காட்டுத் தீ: பொதுமக்கள் அச்சம்

சேந்தமங்கலம் அருகே மலைக்குன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

HIGHLIGHTS

சேந்தமங்கலம் அருகே மலைக்குன்றில் காட்டுத் தீ: பொதுமக்கள் அச்சம்
X

பைல் படம்.

சேந்தமங்கலம் அருகே மலைக்குன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

சேந்தமங்கலம் அருகே உள்ள பொம்மசமுத்திரம் கிராமத்தில், மாசி மலையான் கோயில் குன்று அமைந்துள்ளது. இந்த குன்று சுமார் 500 அடி உயரத்தில் உள்ளது. இந்த குன்றின் மேல் வளர்ந்து காணப்பட்ட செடி கொடிகள் மற்றும் புதர்களில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனால் பெரும் புகை மூட்டம் ஏற்பட்டது.

அப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றவர்கள் தவறுதலாக தீக்குச்சிகளை பற்ற வைத்து அணைக்காமல் போட்டுவிட்டனரா அல்லது வேறு யாராவது காரணமா என்பது குறித்து விவரம் தெரியவில்லை. மேலும் கோடை வெப்பத்தின் காரணமாக காய்ந்த சருகுகள் திடீரென்று தீப்பிடித்திருக்கலாம் என்றும் தெரிகிறது. இரவு நேரத்தில் பற்றி எரிந்த தீ பல கி.மீ தூரம் வரை தெரிந்ததால் அப்பகுதியில் வசித்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Updated On: 16 March 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  6. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  7. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  8. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  9. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  10. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா