/* */

கடன் தள்ளுபடி பட்டியல் வெளியிடக்கோரி கூட்டுறவு சங்கம் முற்றுகை

விவசாயக் கடன் தள்ளுபடி பட்டியலை வெளியிடக்கோரி, நாமக்கல் அருகே கூட்டுறவு சொசைட்டியை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

HIGHLIGHTS

கடன் தள்ளுபடி பட்டியல் வெளியிடக்கோரி கூட்டுறவு சங்கம் முற்றுகை
X

விவசாயக்கடன் தள்ளுபடி பட்டியலை வெளியிடக்கோரி, வேட்டாம்பாடி கூட்டுறவு சொசைட்டியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சொசைட்டி உள்ளது. இந்த சொசைட்டியில் ஏற்கனவே விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர் கடன், நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டது. இந்த சொசைட்டியில் அதன்மூலம் பயன்பெறும் விவசாயிகள் பட்டியல் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தள்ளுபடி செய்யப்பட்ட நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன்களுக்கான பட்டியலை உடனடியாக வெளியிடக்கோரி அவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது: வேட்டாம்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், சுமார் 2,700-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் பயிர்க்கடன்களும், 150-க்கும் மேற்பட்டோர் நகைக்கடன்களும் பெற்றுள்ளோம். நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்து அதற்கான அரசாணையையும் அரசு வெளியிட்டிருந்தது. அதற்கான சான்றிதழை எடுத்துச் சென்று கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் முறையிட்டால் தங்களுக்கு இன்னும் உத்தரவு வரவில்லை என கூறி காலம் தாழ்த்தி வருகின்றனர்.

தற்போது மழை பெய்து, விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்ததால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கடந்த ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்டு பயிர்கடன் மற்றும் நகைக்கடைன் பட்டியலை உடனடியாக வெளியிட்டுள்ள விவசாயிகளுக்கு உத்தரவு வழங்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 24 Nov 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  2. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  3. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  4. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  5. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  6. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  7. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  8. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  9. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  10. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...