/* */

கொல்லிமலையில் கலெக்டர் விசிட்: மலைவாழ்மக்கள் வசிப்பிடங்களில் தடுப்பூசி போட நடவடிக்கை

கொல்லிமலை மலைவாழ் மக்களுக்கு ஏதுவாக, அவர்களின் வசிப்பிடம் அருகே கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என்று டாக்டர்களுக்கு நாமக்கல் கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

HIGHLIGHTS

கொல்லிமலையில் கலெக்டர் விசிட்: மலைவாழ்மக்கள் வசிப்பிடங்களில் தடுப்பூசி போட நடவடிக்கை
X

கொல்லிமலைக்குச் சென்ற நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங், மலைவாழ் மக்கள் வசிப்பிடங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகையில், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெற்றது. அப்போது, கொல்லிமலை பகுதியில் கொரோனா நோய்த்தொற்றின் தன்மை, தடுப்புபணிகள்குறித்தும், குழந்தை திருமணங்கள் நடைபெறுகிறதா என்று, அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், 110 தன்னார்வாலர்கள் மூலம் வீடுவீடாக சென்று ஆக்சிஜன் அளவு சரிபார்க்கப்படுகிறது. தற்போது, கொரோனா நோய்த்தொற்றின் பரவல் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதை தொடர்ந்து, கொல்லிமலை பகுதியை சேர்ந்த அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கான வசதிகள் குறித்து அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:

கொல்லிமலை பகுதி மாணவ, மாணவிகள் அனைவரும், தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பாடங்கள் பயில்வதை ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பழங்குடியினா; நலத்துறையினர் உறுதி செய்ய வேண்டும். கொல்லிமலை பகுதியில் பொதுமக்களின் இருப்பிட அருகே உள்ள அரசு பள்ளிக்கூட கட்டிடம், அரசு கட்டிடங்களில் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று, டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், வாசலூர்ப்பட்டி, திண்ணனூர் பகுதியில் பொதுமக்களிடம் கொரோனா நோய்த்தொற்றின் தீவிரம் பற்றி எடுத்துரைத்து, கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என, கலெக்டர் வலியுறுத்தினார். ஆய்வின் போது, நாமக்கல் ஆர்டிஓ கோட்டைக்குமார், ஊராட்சி ஒன்றியத்தலைவர் மாதேஸ்வரி, மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் ராமசாமி, பிஆர்ஓ சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 23 Jun 2021 12:41 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  2. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  3. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  4. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  5. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  6. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  7. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  8. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  9. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  10. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு