ராசிபுரம் அருகே பன்றிகளுக்கு வைரஸ் பாதிப்பு, அச்சப்பட வேண்டாம்: கலெக்டர்

ராசிபுரம் அருகே பன்றிப் பண்ணையில் ஏற்பட்டுள்ள ஆப்பிரிக்க வைரஸ் பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று கலெக்டர் கூறியுள்ளார்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ராசிபுரம் அருகே பன்றிகளுக்கு வைரஸ் பாதிப்பு,  அச்சப்பட வேண்டாம்: கலெக்டர்
X

கோப்புப்படம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுக்கா, கல்லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி. இவர் சில ஆண்டுகளாக தனது தோட்டத்தில், பண்ணை அமைத்த வெண்பன்றிகள் வளர்த்து வருகிறார். இங்கு வளர்க்கப்படும் வெண் பன்றிகளை தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது பண்ணையில் வளர்க்கப்பட்ட பன்றிகளில் இரண்டு பன்றிகள் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென இறந்தன. இதுகுறித்து அவர் நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு தகவல் தெரிவித்தார். அங்கு சென்ற கால்நடை மருத்துவக் குழுவினர், இறந்த பன்றிகளின் மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள உயர் சக்தி நோய் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில் இறந்த பன்கறிகளுக்கு ஆப்பிரிக்க வைரஸ் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் அந்தப் பண்ணையை கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பண்ணையில் இருந்த பன்றி குட்டிகள் உள்பட 20 பன்றிகளுக்கும் ஆப்பிரிக்க வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையொட்டி, அந்த பண்ணையில் இருந்த அனைத்து பன்றிகளையும் அழித்து, 15 அடி ஆழம் குழி தோண்டி புதைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் பண்ணை அமைந்துள்ள இடத்திலிருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறுகையில், ராசிபுரம் பண்ணையில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நோயானது பன்றிகளில் இருந்து மனிதர்களுக்கோ மற்ற கால்நடைகளுக்கோ பரவாது. பன்றியில் இருந்தே மற்றொரு பன்றிக்கு மட்டும் பரவக்கூடிய நோய் ஆகும்.

இந்த நோய் வைரஸ் தாக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், தீவன சாக்குப் பைகள் மூலம் பிற பன்றிகளுக்கும் மட்டுமே பரவக்கூடியதாகும். இது ஒரு வைரஸ் கிருமியால் ஏற்படும் நோய். எனவே தகுந்த உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளான சுத்தமாக பண்ணையை பராமரித்தல், ரசாயன கலவைக்கொண்ட நடைபாதை அமைத்தல், நீர் மற்றும் கழிவுகள் தேங்காமல் பராமரித்தல், வெளியாட்கள் பண்ணையில் நுழைவது தடுப்பது ஆகிய நடவடிக்கைகள் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம் என்று கூறினர்.

ராசிபுரம் வட்டாட்சியர் சுரேஷ் அங்கு சென்று பன்றி பண்ணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் டாக்டர் பாஸ்கர் ஆகியோர் இதுகுறித்து கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தின் வழியாக பன்றிகள் வாகனங்களில் ஏற்றி செல்லும் போது அது குறித்து தீவிர விசாரணை செய்ய வேண்டும் என காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நோய் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. எனவே அருகாமையில் உள்ள விவசாயிகள், பண்ணையாளர்கள், கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் இதுகுறித்து அச்சப் படத் தேவையில்லை என தெரிவித்தனர்

Updated On: 26 March 2023 3:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    காஞ்சிபுரத்தில் போலி பட்டுச் சேலை விற்பனை அதிகரிப்பு
  2. திருவண்ணாமலை
    நிதி நிறுவன மோசடி; காவல் நிலையத்தை முற்றுகையிட்ட முகவர்கள்
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை
  4. வந்தவாசி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் திடீர் மழை; வேரோடு சாய்ந்த ஆல மரங்கள்
  5. திருப்பூர் மாநகர்
    ‘அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் இல்லை’ - ‘மாஜி’ அமைச்சர் வேலுமணி...
  6. ஆன்மீகம்
    12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்
  7. திருவண்ணாமலை
    சிறுமி பலாத்கார வழக்கு; தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
  8. திருவண்ணாமலை
    கள்ளச்சாராய விற்பனையை தடுப்பது குறித்த ஆய்வுக் கூட்டம்
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அம்ருத் 2.0 குடிநீர் திட்டப் பணிகள்...
  10. தமிழ்நாடு
    மதிமுகவில் இருந்து விலகினார் திருப்பூர் துரைசாமி